நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சமூகத்தில் பிரச்னைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வது வழக்கமானது என குறிப்பிட்டுள்ளது. பொறுப்பான குடிமக்களின் ஜனநாயக செயல்பாடுகளை பொருட்படுத்தும் மக்களாட்சியின் மாண்பு மங்கிவருவதையே தேசத்துரோக வழக்கு வெளிபடுத்துவதாக விமர்சித்துள்ளது.
இதுபோன்ற பொய் வழக்குகளின் மூலம் மாற்றுக் கருத்து உடையவர்களை சிறுமைப்படுத்தும் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்புமாறு எழுத்தாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.