உலகின் மிக உயரமான சிறுவன் இந்தியாவில் தான் இருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சிறுவன் கரண். வயது 8. ஆனால் சிறுவனின் உயரமோ 6 அடி 6 இஞ்ச். சாதாரணமாக 8 வயதில் ஆண் குழந்தைகளின் உயரம் கிட்டத்தட்ட சராசரியாக 120 முதல் 130 செ.மீ வரை தான் இருக்கும். ஆனால் 6 அடி 6 இன்ச் உயரம் இருக்கும் சிறுவன் கரண் உலகிலேயே மிக உயரமான சிறுவன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிறக்கும்போதே கரண் உயரமாகத் தான் இருந்திருக்கிறார். பிறந்த சமயத்தில் கரண் இருந்த எடை 7.8 கிலோ. மற்றும் 63 செ.மீ உயரம். உலகிலேயே அதிக எடை மற்றும் உயரம் கொண்ட குழந்தை என்ற பெருமை கின்னஸ் புத்தகத்தில் கரணுக்கு பிறந்த உடனேயே கிடைத்தது.
3 வயது இருக்கும் போதே 10 வயது குழந்தைகள் அணியும் உடையை தான் அணிந்திருக்கிறார் கரண். ஆனால் இந்த அசாதாரணமான உயரத்தைக் கண்டு எந்தவித சங்கடத்திற்கும் ஆளாகாமல் கூடைப்பந்து விளையாட்டு வீரராக வர வேண்டும் அல்லது டாக்டராக வேண்டும் என்பதே கரணின் கனவாக உள்ளது.
கரணின் அப்பா 6 அடி 7 இன்ச் உயரம் கொண்டவர். கரணின் அம்மா ஸ்வேத்லானாவின் உயரம் 7 அடி 2 இன்ச். ஸ்வேத்லானா இந்தியாவின் உயரமான பெண் என்பது குறிப்பிடத்தக்கது.