உலக பத்திரிகை சுதந்திர தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களுக்கு சுதந்திரமாகவும், உறுதியோடும் பணியாற்ற வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி, ஒரு ஜனநாயக நாட்டில் சுதந்திரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படும் ஊடகம் என்பது மிக முக்கியமானது என்று கூறியுள்ளார். தற்போதுள்ள காலத்தில் சமுக வலைதளங்கள் பிரபலமாகி, ஒருவருக்கொருவர் கருத்துக்களை உடனடியாக வெளிப்படுத்து வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 1993ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில், ஒவ்வொரு ஆண்டும் மே 3ம் தேதியை உலக பத்திரிகை சுதந்திர தினமாகக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸ் ஆகியோருக்கும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.