3வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி! பிரமாண்ட ஏற்பாடு.. யாருக்கெல்லாம் அழைப்பு தெரியுமா?

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?, விருந்தினர்கள் யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி
பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடிமுகநூல்

செய்தியாளர்:ராஜீவ்

நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?, விருந்தினர்கள் யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கிறது. மூன்றாவது முறையாக பிரதமராகும் மோடி மற்றும்அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. இதில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் பிரதமர் ஷெரிங், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாவுத் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். பதவியேற்பு விழாவுக்காக மாலத்தீவு அதிபர் முகமது மொய்சுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியேற்பு விழாவுக்காக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, Seychelles தீவுகளின் துணை அதிபர் Ahmed Afif ஆகியோர் டெல்லி வந்தடைந்தனர்.

இவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதோடு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் விருந்திலும் பங்கேற்க உள்ளனர். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உலகத் தலைவர்களின் வருகை என்பது, இந்தியா தனது 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' எனும் கொள்கை மற்றும் 'சாகர்' தொலைநோக்கு பார்வைக்கு அளித்த உயர்ந்த முன்னுரிமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி
நீட் தேர்வு| வினாத்தாள் கசிவு.. ரிசல்ட்டில் குளறுபடி? குழு அமைத்து விசாரிக்க மத்திய அரசு முடிவு!

பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்களில், இந்த ஆண்டும் வெளிநாட்டுத் தலைவர்கள், கட்டுமானம் மற்றும் தூய்மைத் தொழிலாளர்கள், 'மன் கி பாத்' நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுள்ளன. விருந்தினர் பட்டியலில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கலாச்சார கலைஞர்கள் உள்ளிட்டோரும் உள்ளனர்.கடந்த 2014-ல், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபோது சார்க் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும், 2019-ல், பிம்ஸ்டெக் அமைப்பில் இடம்பெற்றுள்ள பல்வேறு நாட்டு தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

மோடியின் பதவியேற்பு விழா கர்தவ்யா பாதையில் நடத்தப்படலாம் என்று கருதப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்தப்படுகிறது. பகல் நேரம் அதிக வெப்பம் நிலவுவதால், இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி
பவன் கல்யாண் வாழ்க்கையை மாற்றிய சிரஞ்சீவியின் அந்த ஒரு வார்த்தை; அண்ணன்- தம்பியின் பாசக்கதை

வழக்கமாக மாலை நேரம் தொடங்கி இரவு வரை பதவியேற்பு விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், தற்போது வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்கும் விதமாக இவ்வாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோடி பதவி ஏற்பு விழாவையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகை விழாக்கோலம் பூண்டுள்ளது. மாளிகை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு பூக்களை கொண்டு அலங்காரம் மற்றும் விருந்தினர்களை வரவேற்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com