"இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை சம வாய்ப்பு இருக்கும், இந்துக்கள் சிறுபான்மையினராக ஆனவுடன் ஆப்கானிஸ்தானில் நடந்தது இங்கேயும் நடக்கும்" என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறினார்.
இது தொடர்பாக சி.டி.ரவி பேசும்போது, “நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை இந்திய அரசியலமைப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு இருக்கும். இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை சம வாய்ப்பு இருக்கும். இங்கு இந்துக்கள் சிறுபான்மையினர் ஆனவுடன் ஆப்கானிஸ்தானில் நடந்தது இங்கேயும் நடக்கும், அம்பேத்கரின் அரசியலமைப்பைப் பாதுகாக்க விரும்புவோர் இந்த உண்மையை மறந்துவிடக் கூடாது” என தெரிவித்தார்
மேலும், "மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை இந்துக்களின் முக்கிய நம்பிக்கை. சகிப்புத்தன்மை உள்ளவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மதச்சார்பின்மை இருக்கும், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். சகிப்புத்தன்மை உள்ளவர்கள் சிறுபான்மையினராக மாறியவுடன், ஆப்கானிஸ்தான் போன்ற சூழ்நிலை உருவாகும். இந்து அல்லாதவர்கள் பெரும்பான்மை ஆனவுடன், அவர்கள் ஷரியத் பற்றி பேசுவார்கள், அம்பேத்கரின் அரசியலமைப்பு பற்றி அல்ல”என்று அவர் கூறினார்.