இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு - தமிழ்நாடு நிலவரம் என்ன?
நகர்ப்புறப் பகுதிகளில் ஆண்களைவிட மகளிருக்கான வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பது, காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 மாநிலங்களில், கடந்த 12 மாதங்களில் மகளிர் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை இடைவெளி விகிதம், 3.2 சதவீதமாக உள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆந்திர மாநிலத்தில், கடந்த ஆண்டு மகளிருக்கான வேலைவாய்ப்பின்மை 9.1 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு 11 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மகளிருக்கான வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. 17-ஆவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மகளிருக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.3 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு 6.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.