கொல்கத்தா உயர்நீதிமன்றம்
கொல்கத்தா உயர்நீதிமன்றம்ட்விட்டர்

கொல்கத்தா மருத்துவர் கொலை| காவல்துறையை கடுமையாகச் சாடிய நீதிமன்றம்.. இழப்பீட்டை வாங்க மறுத்த தந்தை!

கொல்கத்தா முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறையை நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
Published on

வடக்கு கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரத்தில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்தக் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த தகவல்களை வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாகவும் இக்கொலை சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ளேயும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்ற போராட்டத்தில் மர்ம கும்பல் ஒன்று அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கியது. போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கலைத்தனர்.

இந்தச் சூழலில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட கருத்தரங்கு அறையை மர்ம கும்பல் நாசப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், போலீஸார் இதை மறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது வரை 25 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் 3 கட்ட தேர்தல்.. ஹரியானாவில் அக்.1-ல் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

கொல்கத்தா உயர்நீதிமன்றம்
கொல்கத்தா மருத்துவர் கொலை: ஆளும்கட்சி பேரணி.. 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

இந்த நிலையில் மருத்துவமனை தாக்குதல் சம்பவத்துக்கு, மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை மாநில காவல்துறையையும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான பெஞ்ச், “மாநில அரசின் ஒட்டுமொத்த செயலிழந்த நிலைமையே இது” எனச் சாடியுள்ள நீதிமன்றம், காவல்துறையையும் கண்டித்துள்ளது. “திடீரென மருத்துவமனை வளாகத்தில் 7,000 பேர் குவிந்திருக்கிறார்கள். தாக்குதல் தொடர்பான வீடியோ கிடைத்துள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகளை காவலர்கள் வீசுகிறார்கள்.

இந்த தாக்குதலில் 15 காவலர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால், சம்பவம் நடந்த இடம் பாதுகாப்பாக இருந்துள்ளது. எனவே, திடீரென 7,000 பேர் நடந்து அங்கு வந்திருக்க மாட்டார்கள். இந்த தாக்குதலின் பின்னணியை சிபிஐ விசாரிக்க வேண்டும். பொதுவாக, காவல் துறைக்கு உளவுப்பிரிவு உண்டு. அனுமன் ஜெயந்தி அன்று இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் 7,000 பேர் கூடினால், காவல் துறைக்கு தெரியாது என்று சொல்து ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. உங்கள் (காவலர்கள்) சொந்த ஆட்களையே நீங்கள் பாதுகாக்க முடியவில்லை எனில், அங்குள்ள மருத்துவர்கள் எப்படி அச்சமின்றி பணியாற்றுவார்கள்? நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்களா? நீங்கள் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் என்ன” எனச் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இறுதியில், போராட்டம் பற்றிய அனைத்து விவரங்களையும் வீடியோக்களுடன் சிபிஐயிடம் வழங்குமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: “அலோபதியால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பு” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்!

கொல்கத்தா உயர்நீதிமன்றம்
கொல்கத்தா மருத்துவர் கொலை: வெடித்த வன்முறை.. தடயத்தை அழித்ததா மர்ம கும்பல்? ஆலியா பட் போட்ட பதிவு!

இதற்கிடையே, பணியில் இருக்கும்போது மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. பணியின்போது அவர்கள் மீது உடல்ரீதியான வன்முறை தாக்குதல் நடைபெறுகிறது. அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். பெரும்பாலும் நோயாளிகள் அல்லது நோயாளிகளுடன் வருபவர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். எனவே, பணியின்போது சுகாதாரப் பணியாளர் மீது ஏதேனும் வன்முறை ஏற்பட்டால், சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை (எஃப் ஐ ஆர் ) பதிவு செய்ய வேண்டும். இதற்கு அந்த மருத்துவனை நிர்வாகமே பொறுப்பு' என்று கூறியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை, இழப்பீட்டுத் தொகையைப் பெற மறுத்துள்ளார். மாநில அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள அந்தப் பெண்ணின் தந்தை மறுத்த நிலையில், “இழப்பீட்டுத் தொகையை தான் பெற்றுக்கொண்டால், அது எனது மகளுக்கு வலியை ஏற்படுத்தும். ஆகையால், தனக்கு இழப்பீடு தேவையில்லை, நியாயம்தான் தேவை” என வலியுறுத்தியுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையை வெளியிட மறுத்த, அவர்கள் கடுமையான தண்டனை வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இளம் வயதில் திருமண வாழ்க்கை!! பாகிஸ்தானில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள்.. காரணம் இதுதான்!

கொல்கத்தா உயர்நீதிமன்றம்
கொல்கத்தா மருத்துவர் கொலை: பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. மனு தாக்கல் செய்த பெற்றோர்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com