‘கோன் பனே கா குரோர்பதி’விளையாட்டு நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் வென்ற பெண் தேர்தலுக்கான விழிப்புணர்வு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மகராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தை சேர்ந்தவர் பாபிதா தாடே (Babita Tade). இவர் சமீபத்தில் பிரபலமான இந்தி கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு கோடி ரூபாய் தொகையை வென்றிருந்தார். இவர் அந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு ஊழியரக பணிப்புரிந்து வருகிறார். இந்த மாதம் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அமராவதி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு தூதராக பாபிதா தாடே நியமிக்கப்பட்டுள்ளார். இவரை அம்மாவட்ட தேர்தல் அதிகாரி நியமித்துள்ளார். தேர்தல் நடக்கும் மாநிலங்களில் மக்கள் அதிகளவில் வந்து வாக்கு அளிக்கவேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் அம்மாநிலங்களிலுள்ள நட்சதிரங்கள், பிரபலமானவர்களை தூதர்களாக நியமித்து வருகின்றனர். அவர்கள் மூலம் மக்கள் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது பாபிதா தாடே அந்தப் பகுதியில் பிரபலமாகியுள்ளதால் அவரை இந்தத் தேர்தல் விழிப்புணர்வு தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.