20 வயது பெண்ணின் துணிச்சல் செயல்; தாய் போட்ட ஒற்றை பதிவு..மகளை பாராட்டும் நெட்டிசன்கள்!நடந்தது என்ன?

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்த பதிவிட்ட பதிவு ஒன்று , தற்போது அனைவரின் பாராட்டினையும் பெற்று வருகிறது. பாராட்டை பெறுவதற்கான காரணம் என்ன? என்ன நடந்தது விரிவாகப் பார்க்கலாம்.
பெங்களூரு
பெங்களூருமுகநூல்
Published on

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்த பதிவிட்ட பதிவு ஒன்று , தற்போது அனைவரின் பாராட்டினையும் பெற்று வருகிறது. பாராட்டை பெறுவதற்கான காரணம் என்ன? என்ன நடந்தது விரிவாகப் பார்க்கலாம்.

சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வெளியான அப்பா திரைப்படத்தை நம்மில் பலர் பார்த்திருப்போம்.. அதில், “இருக்குற எடம் தெரியாம இருந்துட்டு போய்டனும்டா” என்ற வசனத்தை கேட்காதவர்களும் இருக்க முடியாது... இந்த வசனத்தில் அர்த்தம், யார் பிரச்னைக்கு போகலாம்.. நாம் உண்டு நமது வேலை உண்டு என்று இருந்து விட்டால் வாழ்க்கை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் சென்று விடும் என்பதுதான் . ஆனால், இது எல்லா நேரங்களிலும் சாத்தியமும் இல்லை. சரியான ஒன்றும் இல்லை..

ஒரு பிரச்னை உண்டானால், அதனை தைரியமாகவும், விவேகத்துடனும் கையாள வேண்டும் என்பதுதான் சரியானதாக இருக்கும். இதுப்போலதான், பெங்களூரு சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் தனக்கு ஏற்பட்ட பிரச்னையை தைரியமாக கையாண்டுள்ளார்.. அது தற்போது சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டை பெற்றுவருகிறது.

பெங்களூரை சேர்ந்த x வலைதளப்பயனரான பூர்ணிமா பிரபு சமீபத்தில் தனது மகளுக்கு நேர்ந்த ஒரு நிஜ சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், “ கடந்த வாரம், எனது 20 வயதுள்ள மகள் சாலையை கடப்பதற்காக காத்திக்கொண்டிருந்தார். சரியாக எங்களது வீட்டிலிருந்து 800மீ தொலைவில் இருக்கும்.. அப்போது, திடீரென பைக்கில் வந்த இரண்டு ஆண்கள் எனது பெண்ணை தரைக்குறைவான வார்த்தைகளால் திட்டி வேகமாக சென்றுள்ளனர்.

அப்போது அவளது உள்ளுணர்வு, விலகி செல் என்று ஒருபுறம் அவளிடம் சொல்ல, ஆனால், அவள் விலகி செல்லவில்லை..இதற்கு எதிராக குரல் கொடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தார். இதனையடுத்து, பைக்கில் சென்ற இருவரை நோக்கி கடும் கூச்சலிட்டு அவர்களை நோக்கி பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்தாள்.

இதனை கண்ட அந்த இருவர்.. ஒரு பிசாசிடத்திலிருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள விரைந்து ஓடிவதுப்போல வேகமாக பைக்கை ஓட்டினர். “ என்று பதிவிட்டார்..

மேலும் இது குறித்து தெரிவித்த அவர், “நான் எனது மகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனெனில், அவளது வயதில் நான் இருந்திருந்தால் கீழே குனிந்துவிட்டு, உடனடியாக அங்கிருந்து சென்றிருப்பேன்.

அதுமட்டுமல்ல, இந்த சம்பவம் நடந்த இடத்தில் எனது மகளுக்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அப்படி இருந்தும் இப்படி நடந்தது. தெரிந்தவர்கள் அதிகம் இருக்கும் இடத்திலேயே நிம்மதியாக நடக்க முடியவில்லையெனில், பிறகு எங்குதான் பாதுகாப்பு?..

பெங்களூரு
ட்ரம்ப் ஜெயித்தால் இந்தியாவுக்கு நல்லதா? மூத்த பத்திரிகையாளர் மணி கூறுவது என்ன?
பெங்களூரு
தங்கத்தின் விலை மேலும் குறையுமா... நகை வியாபாரிகளின் தலைவர் சொல்வதென்ன?

யாராவது கேட்பதற்கு முன்பு ஒன்றை கூறிவிடுகிறேன்.. எனது மகள் முழு சட்டையையும் கணுக்கால் வரையில் நீள பேட்டும்தான் அணிந்திருந்தால்...எனவே இதுபோன்ற கேள்விகளை யாரும் கேட்காதீர்கள்..

எனவே, உங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டால்,அதற்கு மௌனமாக இருக்காதீர்கள். உங்களின் மௌனம் அதற்கு சம்மந்தமாகமாறி விடும்.” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது, அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com