பிகினியோ ஹிஜாபோ... அணிவது பெண்கள் உரிமை - பிரியங்கா காந்தி

பிகினியோ ஹிஜாபோ... அணிவது பெண்கள் உரிமை - பிரியங்கா காந்தி
பிகினியோ ஹிஜாபோ... அணிவது பெண்கள் உரிமை - பிரியங்கா காந்தி
Published on

தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பெண்கள் உடை அணியும் உரிமையை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ளது என்று பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர இந்துத்துவா அமைப்புகள் தரப்பிடமிருந்து திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் சில கல்லூரிகள் ஹிஜாப்புக்கு தடை விதித்தன. மேலும், ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிறுவனங்களுக்குள் இஸ்லாமிய மாணவிகள் வந்தால், நாங்களும் காவி துண்டு அணிவோம் என கூறி இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் உரிமைகளுக்காக இஸ்லாமிய மாணவிகள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராடி வருகிறார்கள்.

இதற்கிடையில், ஹாசன் அரசு கல்லூரிக்கு நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை, காவி துண்டு அணிந்த‌ ஏ.பி.வி.பி. அமைப்பினர் சூழ்ந்து கொண்டு, 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். அந்தக் கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக 'அல்லாஹ் அக்பர்' என முழக்கம் எழுப்பிய காட்சி, உலகளவில் சமூகத்வலைத்தளங்களின் வாயிலாக வைரலானது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடாகாவில் கடந்த ஒருமாதமாக ஹிஜாப் பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில், பதற்றத்தைத் தணிக்க மாநிலம் முழுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “முக்காடு, ஜீன்ஸ், ஹிஜாப் என எந்த உடை அணிய வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு பெண்ணின் உரிமை. இந்த உரிமை இந்திய அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்” என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com