500 கி.மீட்டர் நடந்தே பயணித்த கர்ப்பிணி - மரத்தடியில் குழந்தை பெற்ற அவலம்

500 கி.மீட்டர் நடந்தே பயணித்த கர்ப்பிணி - மரத்தடியில் குழந்தை பெற்ற அவலம்
500 கி.மீட்டர் நடந்தே பயணித்த கர்ப்பிணி - மரத்தடியில் குழந்தை பெற்ற அவலம்
Published on

உத்தரப் பிரதேசம் லலித்பூர் மாவட்டத்தில் 500 கிலோமீட்டர் தூரத்தை கால்நடையாகக் கடந்து 26 வயது பெண் ஒருவர் சாலையோர மரத்தின் கீழ் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் தினசரி கூலித்தொழிலாளர்கள் வேலையின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊரைத் தேடி பயணிக்க ஆரம்பித்தனர். அதில் பலர் உயிரிழக்கவும் நேர்ந்துள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லலித்பூர் மாவட்டத்தில் 500 கிலோமீட்டர் தூரத்தை கால்நடையாகக் கடந்து 26 வயது பெண் ஒருவர் சாலையோர மரத்தின் கீழ் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்தப் பெண் மத்திய பிரதேசத்தில் உள்ள தாரில் இருந்து ஏறக்குறைய 12 பேருடன் சாலை வழியே அணிவகுத்து நடந்தேச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பெண் சாலை வழி பயணத்திற்காகப் புறப்பட்டபோது எட்டரை மாதம் கர்ப்பமாக இருந்தார். பல மையில் நீண்ட நடை பயணத்திற்குப் பிறகு, பாலபீட் கிராமத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்திற்கும் உத்தரப் மாநிலத்திற்குமான எல்லையை அடைந்த போது பாலபீட் கிராமத்தில் புலம்பெயர்ந்த இந்தத் தொழிலாளிகள் ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் தங்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில், இந்தப் பெண் உணவு தயாரிக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அதிர்ஷ்டவசமாக, குழுவில் இருந்த மற்ற பெண்களின் உதவியுடன் பெண் குழந்தையை நல்லபடியாக பிரசவித்துள்ளார்.

பின்னர், பாலபீட் கிராமத்தின் தலைவர் அந்தப் பெண்ணைப் பற்றி அறிந்து, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவை வரவழைத்துள்ளார். அந்தக் குழு தாய் மற்றும் அவரது பிறந்த குழந்தைக்கு உடனடி உதவிகளை வழங்கியதுடன் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளது. இதனிடையே இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com