ஆந்திரா: விவசாய பெண் கூலித் தொழிலாளி கண்டெடுத்த வைரம் - ரூ.12 லட்சத்துக்கு வாங்கிய தொழிலதிபர்??

ஆந்திராவில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண் கூலித் தொழிலாளியொருவர், நிலத்திலிருந்து வைரம் ஒன்றை கண்டெடுத்துள்ளார். அந்த வைரத்தை தொழிலதிபர் ஒருவர் ரூ.12 லட்சத்திற்கு வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.
கண்டெடுக்கப்பட்ட வைரம்
கண்டெடுக்கப்பட்ட வைரம்புதிய தலைமுறை
Published on

ஆந்திர மாநிலம் ராயல் சீமாவின் சில பகுதிகளில் ஆண்டுதோறும் வைர வேட்டை நடப்பது வழக்கம். இவ்வருடமும் மழை துவங்கியதையடுத்து வயல் வெளிகளில் சுற்றித் திரிந்து, வைரத்தை மக்கள் தேடிவருகின்றனர்.

இதில் கர்னூல் என்ற மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் பயிர் அறுவடை செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அங்கு பணிசெய்து கொண்டிருந்த துக்கலி மண்டலம் ஜி.ஏர்ரகுடியைச் சேர்ந்த விவசாய பெண் கூலித் தொழிலாளி ஒருவர் கையில் வைரம் ஒன்று கிடைத்தள்ளது.

diamond
diamondpt desk

இதையறிந்த வியாபாரிகள் அந்த வைரத்தை வாங்க போட்டி போட்டனர். முடிவில் தொழிலதிபர் ஒருவர் ரூ.12 லட்சத்துக்கு அதை வாங்கியதாகத் தெரிகிறது. அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் சில, இந்த வைரம் 2 லட்சத்துக்கு மட்டுமே அத்தொழிலதிபரால் வாங்கப்பட்டிருப்பதாகவும், இதன் மதிப்பு 10 லட்சம் என்றும் சொல்கின்றன. உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த சீசனில் கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகவும் விலை மதிப்புமிக்க வைரம் இது என்று கூறப்படுகிறது.

இந்த பகுதியில் வழக்கமாக லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் கிடைக்கும். ஆனால், ரூ.12 லட்சம் மதிப்புள்ள வைரம் ஒன்று கிடைத்திருப்பது அரிதாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

farmers
farmerspt desk

இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வயல்களில் வைர வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். வைரம் கிடைத்தால் பணக்காரர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து வைர வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com