கால் இல்லாத கணவரை கால் கடுக்க தூக்கிச் சென்ற மனைவி

கால் இல்லாத கணவரை கால் கடுக்க தூக்கிச் சென்ற மனைவி
கால் இல்லாத கணவரை கால் கடுக்க தூக்கிச் சென்ற மனைவி
Published on

மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்குவதற்கு தன் கணவரை தோளில் சுமந்து பெண் ஒருவர் சென்ற காட்சி வைரலாகியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் விமலா. இவரது கணவர் லாரி ஓட்டுநராக இருந்த போது, உடல்நலக் குறைவு காரணமாக கால் துண்டித்து எடுக்கப்பட்டது. வருமானத்தை இழந்த அந்தக் குடும்பம், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகையை பெற்று குடும்ப நிலையை சமாளிக்க நினைத்துள்ளது. இதனால் கணவருக்கான மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்குவதற்காக, விமலா தலைமை செயலகத்திற்கு சென்று கோரிக்கை விடுத்துள்ளார். 

ஆனால் அங்கு அவரின் பேச்சை காதுகொடுத்துக் கேட்காத அதிகாரிகள் கணவரின் புகைப்படத்தை எடுத்துவருமாறு தெரிவித்துள்ளனர். புகைப்படத்தை எடுத்துச் சென்றும் முறையான நடவடிக்கை எடுக்காமல், வேறு அலுவலகத்தை சென்று பார்க்குமாறு சுற்றலில் விட்டுள்ளனர். கணவரை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலியோ, ஆட்டோவில் செல்ல பணமோ இல்லாததால் தோளில் சுமந்தபடியே சென்றுள்ளார் விமலா. ஆனால் அவருக்கு எந்த இடத்திலும் சான்றிதழும் கிடைக்கவில்லை, இறக்கமும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறிதியை உத்திரப் பிரதேசத்தின் அமைச்சர் பூபேந்திர செளத்ரி அளித்துள்ளார். ஆனால் அதற்கு எத்தனை நாட்கள் ஆகுமோ? என்ற கேள்வி தான் எழுகிறது விமலாவிடம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com