உத்தரபிரதேச மாநிலத்தில் மதுவுக்கு அடிமையான பெண் ஒருவர், தனது கணவரின் பிறப்புறப்பினை சிகரெட்டின் மூலம் துன்புறுத்தி சித்தரவதை செய்த நிலையில், அம்மாநில போலீசார் அப்பெண்னை கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் மன்னன். இவர், சஃபியாபாத் கிராமத்தை சேர்ந்த மெஹர் ஜஹான் என்பவரை கடந்த ஆண்டு நவம்பவர் 17 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதன்பின்னர், தன் மனைவி கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது குடும்பத்தை விட்டு இருவரும் தனிக்குடுத்தனம் சென்றுள்ளனர்.
இந்நிலையில், திருமணம் ஆன சில நாட்களிலேயே மன்னனின் மனைவி மெஹர், மதுப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
இந்நிலையில், மன்னன் அவரது மனைவியை கண்டித்தும் அவர் அப்பழக்கத்தை விட்டபாடில்லை. மேலும், மெஹர் அவரது கணவரை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியும், கை கால்களை கட்டியும் போதை பொருட்களை அவருக்கு தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். மேலும், அவரது கணவரின் பிறப்புறப்பில் சிகரெட்டை வைத்தும் துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று மன்னன் கூறியபோது, மன்னனின் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவேன் என்று மனைவி மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், செய்வதறியாது திகைத்த மன்னன், தான் துன்புறுத்தப்பட்ட காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவை சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி வழங்கி புகார் அளித்துள்ளார்.மேலும் தான் துன்புறுத்தப்பட்டதையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதனை ஆய்வு செய்த காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு எதிராக பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
தற்போது, பாதிப்பட்ட நபர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.