வாட்ஸ்-அப் மெசேஜை பிடுங்கிப் பார்த்த கணவனை அரிவாளால் வெட்டினார் மனைவி

வாட்ஸ்-அப் மெசேஜை பிடுங்கிப் பார்த்த கணவனை அரிவாளால் வெட்டினார் மனைவி
வாட்ஸ்-அப் மெசேஜை பிடுங்கிப் பார்த்த கணவனை அரிவாளால் வெட்டினார் மனைவி
Published on

ஆக்ரா அருகே உள்ள பிலாவலி கிராமத்தில் தனது வாட்ஸ்-அப் மெசேஸ்களை பிடுங்கிப் பார்த்த கணவனை, மனைவி அரிவாளால் வெட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பிலாவலி கிராமத்தில் வசித்து வருபவர் நேத்ரபால் சிங். இவருக்கும், நீது சிங் என்பவருக்கும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேத்ரபால் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நீது அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். 
அப்போது நீது சிங், வேறொருவருடன் வாட்ஸ்-அப்பில் சேட் செய்து கொண்டிருந்ததை பார்த்த அவரது கணவர், மொபைல் ஃபோனை தரும்படி கேட்டுள்ளார். இதற்கு நீது மறுக்கவே, அவரிடமிருந்து நேத்ரபால் வலுக்கட்டாயமாக ஃபோனை பிடுங்கி பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நீது, அருகில் இருந்த அரிவாளை எடுத்து நேத்ராவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த நேத்ரபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாதிக்கப்பட்டவர் தற்போது வரை காவல்நிலையத்தில் புகார் அளிக்காததால், நீதுவின் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com