“சிலருடன் சேர்ந்து இவ்வாறு செய்கிறார்”- பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட பெண்ணின் தந்தை

“சிலருடன் சேர்ந்து இவ்வாறு செய்கிறார்”- பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட பெண்ணின் தந்தை
“சிலருடன் சேர்ந்து இவ்வாறு செய்கிறார்”- பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட பெண்ணின் தந்தை
Published on

அசாதுதீன் ஒவைஸி பங்கேற்ற மேடையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட பெண் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தனது மகள் பேசியது தவறுதான் என முழக்கமிட்ட இளம்பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.

பெங்களூருவில் சிஏஏ-வுக்கு எதிராக ‘அரசியலமைப்பை காப்போம்’ என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது. இதில், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித்
தலைவர் அசாதுதீன் ஒவைஸி கலந்து கொண்டார். அந்த பேரணியில் ஒவைஸி மேடையேறியபோது, பெண் ஒருவர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என
மைக்கை பிடித்து கோஷமிட்டார். உடனடியாக அதனை தடுக்க முற்பட்ட ஒவைஸி, அந்தப் பெண்ணிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சித்தார்.

எனினும் அந்தப் பெண் மைக்கை கொடுக்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார். இதனையடுத்து காவல்துறையினர் மேடையேறி அந்தப் பெண்ணை
வலுக்கட்டாயமாக கீழிறக்கி கைது செய்தனர். அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்ய ஜாமீன் மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ என் மகள் பேசியது தவறுதான். அவர் சில முஸ்லிம்களுடன் இணைந்துக் கொண்டு இவ்வாறு செய்கிறார். அத்துடன் எங்கள் பேச்சையும் கேட்பதில்லை” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து பேசிய ஒவைஸி, அந்த பெண்ணுக்கும், தமது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார். மேலும், “அமைப்பாளர்கள் அந்த பெண்ணை இங்கு அழைத்திருக்கக்கூடாது. இது எனக்குத் தெரிந்திருந்தால், நான் இங்கு வந்திருக்க மாட்டேன். நாங்கள் இந்தியாவுக்கானவர்கள். எதிரி நாடான பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டோம். எங்களின் முழு உந்துதலும் இந்தியாவை காப்பாற்றுவதேயாகும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com