உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டம் மாஷி தாலுகாவின் வனப் பகுதியை ஓட்டிய கிராமங்களில் இரவு நேரங்களில் ஓநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஓநாய்கள் தாக்குதலால் குழந்தைகள், பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஓநாய் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. கதவு இல்லாத வீடு ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த 3 வயது குழந்தையை அதிகாலை மூன்று மணிக்கு ஓநாய் தூக்கிச்சென்றது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட பிறகே ஒநாய் குழந்தையை தூக்கிச் சென்றதைக் கண்டதாக தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ஓநாய்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வனத்துறை இதுவரை 4 ஓநாய்களை பிடித்துள்ளனர். மேலும் இரண்டு ஓநாய்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.