பாகிஸ்தான் வசம் சிறைப்பிடிக்கப்பட்டு தாயகம் திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனிடம் அனைத்து துறை விசாரணையும் முடிவடைந்தது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை விராட்டி அடித்தது. அப்போது, பாகிஸ்தான் வசம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சிக்கினர். பின்னர், இரண்டு நாட்களில் பாகிஸ்தான் அரசு அவரை விடுவித்தது.
இதனையடுத்து, தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த போது, முகத்தில் சிறிய பயம் இல்லாமல் பாகிஸ்தான் ராணுவத்திடம் பேசிய பேச்சு பலரையும் கவர்ந்தது. அதனையடுத்து, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அபிநந்தன் சிகிச்சை பெற்று வந்தார்.
விமானத்திலிருந்து பாரசூட்டில் குதித்ததில் அவருக்கு பின் முதுகெலும்பு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தானில் அபிநந்தன் எத்தகைய இன்னல்கள் மற்றும் சவால்களை சந்தித்தார் என்பது குறித்து பாதுகாப்புத்துறைக்கான உயர்மட்ட அதிகாரிகள், மற்றும் விமானப்படையை சேர்ந்த உயரதிகாரிகளிடம் விவரித்தார். இந்த சுழலில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனிடம் அனைத்து துறை விசாரணையும் நிறைவடந்தது.
விசாரணைகள் முடிந்ததையொட்டி, மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவ விடுப்பில் அபிநந்தன் சென்றார். அபிநந்தன் மருத்துவ விடுப்பில் செல்ல ராணுவ மருத்துவமனை அறிவுறுத்தியதால் சில வாரங்கள் வரை அவர் மருத்துவ விடுப்பில் இருப்பார் என இந்திய விமானப்படையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.