இந்திய ராணுவத்தில் முதன்முறையாக Wind Tunnel!

இமாச்சலப்பிரதேசத்தில் பாக்லோவில் அமைந்துள்ள சிறப்பு ராணுவ பயிற்சி மையத்தில், செங்குத்தாக இயங்க கூடிய வகையில் காற்று சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது வீரர்களின் திறனை மேலும் மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
காற்று சுரங்கப்பாதைகள்
காற்று சுரங்கப்பாதைகள்முகநூல்
Published on

இமாச்சலப்பிரதேசத்தில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி மையத்தில் செங்குத்தாக இயங்க கூடிய வகையில் காற்று சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காற்று சுரங்கப்பாதைகள்
காற்று சுரங்கப்பாதைகள்

பாக்லோவில் அமைந்துள்ள சிறப்பு ராணுவ பயிற்சி மையம் ஒன்றில், ராணுவ வீரர்கள் எல்லா வகையான சூழ்நிலைகளையும் கையாளும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தவகையில் இங்கு சமீபத்தில் செங்குத்தான அமைப்பில் வடிவமைக்கப்பட்ட இந்த காற்று சுரங்கப்பாதை தொடங்கப்பட்டுள்ளது. இதை ராணுவ தளபதி மானோஜ் பாண்டே காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

இது ராணுவ வீரர்களின் திறன்களை மேலும் மேம்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்திய ராணுவம், “இந்திய ராணுவத்தில் முதன்முறையாக இதுபோன்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையில் இந்த அமைப்பானது உதவும். வான்வழியில் பாராசூட் மூலமாக நேராக குதித்து தங்களின் திறனை மேம்படுத்தும் வீரர்களுக்கு மேலும் வலுவூட்டும் விதமாக இந்த பயிற்சி அமையும்” என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com