அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சுதேசி கொள்கையால் பாதிக்கப்படும் அச்சத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினர், மத்திய பட்ஜெட்டில் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 37 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். சுமார் 15 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வர்த்தக மதிப்புள்ள தகவல் தொழில்நுட்பத் துறையினர், டொனால்ட் ட்ரம்பின் உள்நாட்டு வேலைவாய்ப்பை பெருக்கும் அறிவிப்பால் அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மற்ற நாடுகளின் பணிகள் இந்தியாவுக்குக் கிடைக்கும் வகையில் வரிச் சலுகைகளை அறிவிக்க தகவல் தொழில்நுட்பத் துறை தரப்பில் அருண் ஜெட்லியிடம் வலியுறுத்தியுள்ளனர். அந்நிய முதலீட்டுக்கு வரிச் சலுகை அறிவித்தால், மற்ற நாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப சேவைப் பணிகள் இந்தியாவுக்கு கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.