ராய் பரேலியைத் தக்க வைக்கிறாரா ராகுல்? அப்போ வயநாடு? ட்விஸ்ட் வைத்த கேரள காங்கிரஸ் தலைவர்

ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், ராய் பரேலி தொகுதியை தக்க வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி
ராகுல் காந்திpt web
Published on

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் ராய் பரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் வெற்றிபெற்றார். வயநாட்டில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராய் பரேலியில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 30 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராய் பரேலியில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, அடுத்து வயநாட்டிற்கு வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சாலையில் பேரணியாக சென்று நன்றி தெரிவித்த ராகுல் காந்தியை INDIA கூட்டணி தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

ராகுல் காந்தி
நடுவானில் குலுங்கிய விமானம்| பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு.. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

முன்னதாக, மலப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் எதைத் தக்க வைத்துக்கொள்வது என்பதில் குழப்பம் நீடிப்பதாகவும், இதில் தான் எடுக்கப்போகும் முடிவு எதுவாக இருந்தாலும் இரு தொகுதி மக்களுக்கும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். அவர் ராய் பரேலி தொகுதியைத் தான் தக்கவைப்பார் என்ற கருத்து இருக்கிறது. ஏனெனில் உத்தரப்பிரதேசத்திற்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது. அதுமட்டுமின்றி காங்கிரஸ் நெடுநாட்கள் கழித்து மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் காலூன்றியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இழந்த செல்வாக்கையும் மீட்க வேண்டும்; அனைத்தையும் தக்க வைக்க வேண்டுமானால், ராகுல் அங்கு இருக்க வேண்டும். இந்த காரணங்களுக்காக ராகுல்காந்தி ராய் பரேலியைத்தான் தக்கவைப்பார் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில்தான், வயநாடு எம்.பி. பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுதாகரன் கூறுகையில், “ராகுலுக்கு தேசத்தைக் காக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. வயநாடு எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்தால் கேரள மக்கள் வருத்தப்படக் கூடாது. ராகுலைப் புரிந்துகொண்டு கேரள மக்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ஜெய்சங்கருக்கு காத்திருக்கும் சவால்கள்

தற்போது ராகுல்காந்தி வயநாட்டில்தான் இருக்கிறார். நாளை அல்லது நாளை மறுநாள் அவர் எந்த தொகுதியை தக்கவைப்பார் என்ற தகவலை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டிய முன்னோட்டமாகத்தான் கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவரின் கருத்து இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். அதேவேளையில், ராகுல் காந்தி ராஜினாமா செய்யும்பட்சத்தில் வயநாட்டின் அடுத்த காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற முடிவுக்கும் காங்கிரஸ் கட்சி இன்னும் வரவில்லை என்றே கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com