புதுச்சேரி: கோடை வெப்பத்தை சமாளிக்க போலீஸூக்கு ஏசி ஹெல்மெட்? அமைச்சர் சோதனை!

புதுச்சேரி போலீசாருக்காக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தயாரித்துள்ள ஏசி பொருத்திய ஹெல்மெட்டை தயாரித்துள்ளது. அதை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பரிசோதனை செய்தார்.
Minister namasivayam wearing AC Helmet
Minister namasivayam wearing AC Helmetpt desk
Published on

புதுச்சேரி மாநிலத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதை கடைபிடிப்பதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆகவே ஹெல்மெட் அணியாதோருக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காவல் துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை தலைவர் ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அவர்களும் இந்த கோடை காலத்தில் ஹெல்மெட் அணிவதை சற்று சிரமமாகவே பார்க்கின்றனர்.

ac helmet demo
ac helmet demopt desk

இதனை கருத்தில் கொண்டு தெலங்கானாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் குளிர்சாதன ஹெல்மெட்டை தயாரித்துள்ளது. அதை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் காண்பித்து, செயல்படும் முறைகளை விளக்கியுள்ளனர் தயாரிப்பு நிறுவனத்தினர்.

அதை அணிந்து பார்த்த அமைச்சர் நமச்சிவாயம், “இந்த தயாரிப்பு குறித்து பல்வேறு துறைகளின் அனுமதி தேவைப்படுகின்றது. ஆகவே இதன் செயல்பாடுகள், நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்பு இதை காவலர்களுக்கு கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com