தானே |கடத்தப்பட்ட அரிய வகை விலங்குகள் மீட்பு - வைரலாகும் வீடியோ

தானே: டோம்பிவிலியில் உள்ள உயரமான மலைப்பகுதியில் இருந்து வனவிலங்கு கடத்தல் கும்பலிடமிருந்து வனத்துறையினர் அரிய வகை விலங்குகளை மீட்டனர்.
அடைத்து வைக்கப்பட்ட குரங்கு
அடைத்து வைக்கப்பட்ட குரங்குஎக்ஸ் வலைதளம்
Published on

தானே: டோம்பிவிலியில் உள்ள உயரமான மலைப்பகுதியில் இருந்து வனவிலங்கு கடத்தல் கும்பலிடமிருந்து வனத்துறையினர் அரிய வகை விலங்குகளை மீட்டனர்.

மும்பையை அடுத்த தானேவில், டோம்பிவிலி, பலவா நகரில் உள்ள சவர்ணா பில்டிங்கின் பி விங்கில் உள்ள 8வது மாடி குடியிருப்பில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், பல்லி, ஆமைகள், அரிய வகை பாம்புகள் மற்றும் பிற ஊர்வன உள்ளிட்ட விலங்குகள் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது இதில் குடியிருப்பின்கழிவறையில் ஒரு குரங்கு கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்

இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பெயரில், மன்பாடா காவல் நிலையத்தின் ஒரு குழுவும் இவர்களுடன் இணைந்து சட்டத்திற்கு மீறி அடைத்துவைக்கப்பட்ட விலங்குகளை மீட்டனர்.

ஆனால் அந்த குடியிருப்பில் விலங்குகளைத் தவிர, குற்றவாளிகள் யாரும் அங்கில்லை. ஆகவே வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், கைப்பற்றப்பட்ட விலங்குகளை உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் தற்காலிக அடிப்படையில் கண்காணிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டது.

இந்த காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com