உ.பி.| பாஜக சிட்டிங் எம்பியான கணவரை எதிர்த்து களத்தில் குதித்த மனைவி!

உத்தரப்பிரதேச இட்டாவா தொகுதியில் தன் கணவரை எதிர்த்து மனைவியும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
மிர்துளா கத்தேரி
மிர்துளா கத்தேரிட்விட்டர்
Published on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராம்சங்கர் கத்தேரியா
ராம்சங்கர் கத்தேரியா

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மக்களவைத் தொகுதிகளில் இட்டாவாவும் ஒன்று. இந்தத் தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் அமைச்சரும் சிட்டிங் எம்பியுமான ராம்சங்கர் கத்தேரியா களமிறக்கப்பட்டு உள்ளார். இவர், வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், அவரை எதிர்த்து அவருடைய மனைவியான மிர்துளா கத்தேரியாவும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இவர், அத்தொகுதியில் சுயேட்சையாகக் களமிறங்கியுள்ளார்.

இதையும் படிக்க: சட்டீஸ்கர் | பூங்காவில் காதலர்களை விரட்டிவிரட்டி விசாரணை நடத்திய பாஜக எம்.எல்.ஏ... #Viralvideo

மிர்துளா கத்தேரி
”காய்கறி வெட்டும் கத்தியால் எதிரியின் தலையை வெட்டுங்கள்”-பாஜக எம்பி பிரக்யா சர்ச்சை பேச்சு

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போதும் இதேபோல மிர்துளா மனுத் தாக்கல் செய்தார். பின்னர், அதைத் திரும்ப பெற்றார்.

ஆனால், “இந்த முறை தம்முடைய வேட்பு மனுவைத் திரும்பப் பெறப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ள அவர், “இது ஜனநாயக நாடு. இங்கு அனைவரும் சுதந்திரமானவர்கள். யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். நான் என் கணவருக்கு எதிராக நிற்கிறேன். அவர் எனக்கு எதிராக போட்டியிடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செய்தித்தாள்களில் புதிய மன்னிப்பு விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி!

மிர்துளா கத்தேரி
மேற்கு வங்கம்: பரப்புரையில் மாணவிக்கு முத்தம் கொடுத்த பாஜக எம்பி.. வெடித்த சர்ச்சை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com