10 ரூபாய் லிப்ஸ்டிக்கு பதிலாக 30 ரூபாய் லிப்ஸ்டிக்கை வாங்கி வந்த கணவரிடம், மனைவி விவாகரத்து கோரியுள்ள சம்பவம் பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணமோ, வீட்டில் ஏற்பாடு செய்த திருமணமோ எதுவாக இருந்தாலும் விவாகரத்து என்பது தற்சமயங்களில் சில பேருக்கு மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.
குறிப்பாக, விவாகரத்திற்கான காரணங்களை கேட்டால் இதற்கெல்லாம் விவாகரத்து செய்யலாமா? என்ற எண்ணம்தான் பெரும்பாலானவர்களுக்கு தோன்றும். வளர்ந்து வரும் தொழில்நுட்பம், காலத்திற்கு ஏற்ப மனிதர்களின் பரிணாம வளர்ச்சியும், அதனால் மாறும் கொள்கைகளும் விவாகரத்திற்கான காரணமாக பார்க்கலாம்.
இப்படிதான், விநோத காரணம் ஒன்றினை கூறி இளம்ப்பெண் ஒருவர் நீதிமன்றத்தினை நாடியுள்ள சம்பவம் பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், பெண் ஒருவர் தனது கணவரிடம் 10 ரூபாய் லிப்ஸ்டிக்கினை வாங்கி வர சொல்லி இருக்கிரார். ஆனால், பல கடைகளை தேடியும் கணவருக்கு 10 ரூபாய் லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை. இதனால், 10 ரூபாய்க்கு பதிலாக 30 ரூபாய் லிப்ஸ்டிக்கினை வாங்கி வந்துள்ளார்.
இதனை கண்ட மனைவி , கோபமடைந்து 10 ரூபாய் லிப்ஸ்டிக் பதிலாக 30 ரூபாய் லிப்ஸ்டிக்கினை வாங்க வந்தது ஏன்? என கேட்டு வாக்கு வாதத்தில் தன் தாய்விட்டுக்கு சென்றுள்ளார். இதன்பிறகு இது குறித்து காவல்நிலையத்தில் புகார் ஒன்றினையும் அளித்துள்ளார்.
இதனையடுத்து, குடும்ப ஆலோசனை மையத்திற்கு இவ்வழக்கு அனுப்பப்பட்டது. இதனை விசாரித்த ஆலோசகர் சதீஷ் கீர்வார் இது குறித்து விசாரணை நடத்தவே, “என் கணவருக்கு சேமிக்கும் பழக்கம் இல்லை. குழந்தைகளுக்காக சேமிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை” என்று அப்பெண் கூறியுள்ளார். ஆனால் கணவரோ, எங்கு தேடியும் அந்த விலையில் லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம். உண்மையில் அவர்களின் பிரச்னை லிப்ஸ்டிக் இல்லை, அதிகமாக செலவு செய்வதுதான் என்பது புரிய வந்தது. இந்நிலையில், இருவரிடமுடம் நிலைமையை கூறிய ஆலோசகர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படி லிப்ஸ்டிக் தொடங்கிய சண்டை விவாகரத்திற்கு இட்டு சென்றுள்ளது என்பது சற்று ஆச்சிரியத்தைதான் ஏற்படுத்தியுள்ளது.