காருக்கு எரிபொருள் வழங்க மறுப்பு; பேருந்தில் பயணம் செய்த அமைச்சர்..!

காருக்கு எரிபொருள் வழங்க மறுப்பு; பேருந்தில் பயணம் செய்த அமைச்சர்..!
காருக்கு எரிபொருள் வழங்க மறுப்பு; பேருந்தில் பயணம் செய்த அமைச்சர்..!
Published on

அமைச்சரின் காருக்கு எரிபொருள் நிரப்ப மறுத்ததால் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பேருந்தில் அமைச்சர் பயணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரி அரசு துறைகளில் இயக்கப்படும் வாகனங்களுக்கு அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்பப்படுகின்றது.

இந்நிலையில் புதுச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காரைக்காலைச் சேர்ந்த வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் வாகனம் நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் நிலையத்திற்கு சென்று டீசல் நிரப்ப கேட்டுள்ளனர். அதற்கு அமுதசுரபி ஊழியர்கள் டீசல் நிரப்ப மறுத்து விட்டார்கள். தனிடையே நேற்று மாலை முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு வந்து புதுச்சேரிக்கு செல்ல தயாராக இருந்த புதுச்சேரி அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தார். இதனையடுத்து பயணச்சீட்டிற்கான பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு சகபயணிகளுடன் புதுச்சேரிக்கு பயணித்தார். இந்த சம்பவம் காரைக்கால் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இது குறித்து அமுதசுரபி ஊழியர்களிடம் கேட்டபோது கடந்த நான்கு மாதத்தில் அரசு துறைகளை சேர்ந்த வாகனங்களுக்கு ரூ.2கோடிக்கு மேல் பாக்கியுள்ளதால் ஜனவரி 1 ஆம் தேதி முதல் டீசல் வழங்க முடியாது என கூறிவிட்டதாக தெரிவித்தனர். எரிபொருள் இல்லாத காரணத்தால் அமைச்சரின் வாகனம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com