நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட பவன் ஜல்லாட்டிற்கு முதல் வாய்ப்பு ஏன்?

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட பவன் ஜல்லாட்டிற்கு முதல் வாய்ப்பு ஏன்?
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட பவன் ஜல்லாட்டிற்கு முதல் வாய்ப்பு ஏன்?
Published on

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நான்கு பேரும் தூக்குதண்டனையை எதிர்த்து பல்வேறு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களின் சீராய்வு மற்றும் கருணை மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நால்வரையும் இன்று அதிகாலை தூக்கிலிட உத்தரவிடப்பட்டது. அதன்படி நால்வருக்கும் அதிகாலை 5.37 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியில் ஈடுபட்ட பவன், உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர். இந்த பணிக்காக இவருக்கு தலா ரூ.20,000 என மொத்தம் ரூ.80,000 ஊதியமாக தரப்படுகிறது. இந்த பணிக்கு பவன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், மரண தண்டனை நிறைவேற்றுபவரின் பணியை அவர் தனது முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொண்தே ஆகும்.

அவரது தந்தை மற்றும் முந்தைய மூன்று தலைமுறையினரும் இந்த பணியைதான் செய்து வந்துள்ளனர். எனவே அவர்களிடமிருந்து தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான விவரங்களைக் அவர் கற்றுக்கொண்டார்.

அவரது பணி எப்போதும் நன்றாக இருப்பதாகவும், பணியில் அவர் சிறு பிழையைச் செய்யவும் வாய்ப்பில்லை என்றும் சிறை அதிகாரிகள் கூறுகிறார்கள். “இந்தி படங்களில் மரண தண்டனை நிறைவேற்றுபவர்களை சித்தரிப்பு செய்து காட்டுவதுபோலல்லாமல், பவன் ஒரு சாதாரண மனிதனைப் போல, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருபவர்தான். அவர் தனது வாழ்க்கையில் ஒரு கடினமான பொருளாதார சூழ்நிலையை எதிர்கொண்டிருந்தாலும், அவரது குடும்பத்தினர் அவரது வேலையைப் பற்றி பெருமிதமே கொள்கின்றனர்”எனவேதான் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட பவன் ஜல்லாட்டிற்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டதாக சிறைத்தரப்பு தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com