200ஆண்டுகள் பழமையான சடங்கு; பெண்களை போல உடைஅணிந்து தாண்டியா நடனமாடும் ஆண்கள்! வரலாற்று பின்னணி என்ன?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நவராத்திரியின் எட்டாவது நாள் இரவில்,பெண்களை போல ஆண்கள் உடை அணிந்து கர்பா எனப்படும் தாண்டியா நடனமாடுவது வழக்கம். அதன் பின்னணி என்ன.. விளக்குகிறது இந்த தொகுப்பு!
அகமதாபாத்
அகமதாபாத்முகநூல்
Published on

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நவராத்திரியின் எட்டாவது நாள் இரவில், பெண்களை போல ஆண்கள் உடை அணிந்து கர்பா எனப்படும் தாண்டியா நடனமாடுவது வழக்கம். அதன் பின்னணி என்ன.. விளக்குகிறது இந்த தொகுப்பு!

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியா முழுவதும் நவராத்திரி பண்டிகையானது கோலாகலமாக தொடங்கியது.. அதிலும் நவராத்திரியின் போது குஜராத்தில் அரங்கேறும் தாண்டியா எனப்படும் கர்பா நடனம் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, அகமபாத்தில் நடக்கும் கர்பா நடனம் மற்ற இடங்களை ஒப்பிடுகையில், அனைவரும் கவனத்தையும் பெற்றதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை..

காரணம்: சாது மாதா நி போலில் என்ற 200 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இவ்விடத்தில் நடைபெறும் ஒரு சடங்குமுறைதான்... இங்கு ஒவ்வொரு ஆண்டும், நவராத்திரியின் எட்டாவது நாளில், இப்பகுதியில் வசிக்கும் பரோட் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களை போல உடை அணிந்து, கர்பா நடனம் ஆடுவது வழக்கம்..

இதற்கு பின்புறம் ஒரு ஸ்வாரஸ்ய வரலாற்றுப்பிண்ணனி ஒன்று இருக்கிறது.. கர்பா என்பது பாரம்பரிய நடனம் மட்டுமல்ல.. இது முன்னொரு நாளில் கொடுக்கப்பட்ட சாபத்திற்கு பரிகாரம் செய்யும் ஒரு கதையை உள்ளடக்கி இருக்கிறது..

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு முகலாய மன்னர்களிடமிருந்து சதுபென் என்ற பெண் தன்னை பாதுகாக்குபடி, பரோட் இன ஆண்களிடம் உதவி கோரியுள்ளார். ஆனால், பரோட் இன ஆண்களால் அப்பெண்னை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.. இதன்பிறகு, சதுபென்னின் சிறு குழந்தையை கொன்றுவிட்டு சதுப்பென்னை முகலாயார்கள் அழைத்து சென்றுவிட்டனர்.. இதனால், கோபமடைந்த சதுபெண், பரோட் இன மக்களை சபித்து, உங்கள் சந்ததிகள் கோழையாக இருப்பார்கள் என்றும், உடன்கட்டை ஏறி இறப்பார்கள் என்றும் சாபமிட்டுள்ளார்.

அகமதாபாத்
அரியலூர் | சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் தீர்ப்பு

எனவே, இந்த சாபத்திலிருந்து விமோச்சனம் பெறுவதற்காக கடந்த 200 அண்டுகளாக பெண்களை போன்று ஆண்கள் புடவை அணிந்து கர்பா நடனம் ஆடி, பாவத்திற்கு பரிகாரம் செய்து வருகிறார்கள் என்று அப்பகுதியில் வசிக்கும் பரோட் இனமக்கள் கூறுகிறார்கள்..

மேலும், அஷ்டமியன்று சதுபென் உயிரோடு வருவதாக நம்பும் பரோட் மக்கள், ஒவ்வொரு ஆண்டும் அஷ்டமி இரவில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளரர் வசிக்கும் சது மாத நி போல் என்ற இடத்தில் இந்த நடனத்தை நடத்துகிறார்கள்..

சதுபென் மனதை குளிர்விக்கவும், ஆசிர்வாதத்தை பெறும் நோக்கிலும், சது மாதவிற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுவதாகவும், வணிகம், தொழில் முன்னேற்றம் போன்ற தனிப்பட்ட காரணங்களுக்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதை நிறைவேறியனால் அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுவதாக பரோட் சமூக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com