பா.ஜ.கவுக்கு எதிராக கேள்வி எழுப்புபவர்கள் அனைவரும் நாட்டிற்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ''மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் நாட்டிற்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அப்படியில்லாவிட்டால் வருமானவரித்துறை அல்லது அமலாக்கத்துறையிலிருந்து சோதனையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இது தான் அரங்கேறி வருகிறது.
அந்நிய நாடு ஆக்கிரமித்துள்ள இந்திய எல்லைகளை மத்திய அரசு பாதுகாக்க தவறிவிட்டது என நான் கூறினால் நான் தேசவிரோதியா?. செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றால், டீசல் மற்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69 மற்றும் ரூ.77 ஆக குறையும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள் : இப்படியே பேசினால் 'நாக்கை அறுத்துவிடுவோம்' - பாஜகவினருக்கு சந்திரசேகர் ராவ் மிரட்டல்