'காண்டம் அதிகம் பயன்படுத்துவது நாங்கள்தான்'- மோகன் பகவத் கருத்துக்கு ஒவைசி பதிலடி

'காண்டம் அதிகம் பயன்படுத்துவது நாங்கள்தான்'- மோகன் பகவத் கருத்துக்கு ஒவைசி பதிலடி
'காண்டம் அதிகம் பயன்படுத்துவது நாங்கள்தான்'- மோகன் பகவத் கருத்துக்கு ஒவைசி பதிலடி
Published on

மத அடிப்படையிலான மக்கள்தொகை குறித்து மோகன் பகவத் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹைதராபாத் எம்.பி அசாதூதின் ஒவைசி பேசியுள்ளார்.

அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மத்தியில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், ''நமது நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் அவசியம். மத அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதேபோல் கட்டாய மதமாற்றமும் அதிகரித்து இருக்கிறது. மக்கள்தொகை கட்டுப்பாட்டு மட்டுமின்றி, மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலையும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இதை நாம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹைதராபாத் எம்.பி அசாதூதின் ஒவைசி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை. எனவே கவலைப்பட வேண்டாம். முஸ்லீம் மக்கள் தொகை சரிந்துதான் வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து மோகன் பகவத் பேச வேண்டாம். மோகன் பகவத் குர்ஆனை படிக்க வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். சிசுவை கொல்வது மிகப்பெரும் பாவம் என்று அல்லா சொல்லியிருக்கிறார். கர்ப்ப கால இடைவெளியை முஸ்லீம்கள் பின்பற்றுகிறார்கள். ஆணுறைகளை அதிகம் முஸ்லீம்களே பயன்படுத்துகின்றனர்'' என்று ஒவைசி கூறினார்.

இதையும் படிக்க: காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினாரா சசிதரூர்? ராகுல் காந்தி கொடுத்த விளக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com