அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸின் ட்வீட் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த ட்வீட்டில் அவர் இந்தியாவைச் சேர்ந்த பட்டியலினப் பெண் போராளி நவ்தீப் கவுர் விடுதலை குறித்து வலியுறுத்தியிருந்தார்.
கடந்த ஜனவரி 12 ஆம் தேதியன்று போராட்ட களத்தில் இருந்த போது நவ்தீப் கைது செய்யப்பட்டிருந்தார். டெல்லிக்கு அருகில் உள்ள சிங்கு எல்லையில் தொழிற்கூடங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் முறையற்ற ஊதியம் குறித்து அறவழியில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரான நவ்தீப் போராடி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“நான் உங்கள் எல்லோருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 23 வயதேயான தொழிலாளர் நல உரிமை ஆர்வலர் நவ்தீப் கவுர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் கஸ்டடியில் உள்ள அவர் கடும் சித்திரவதைக்கு ஆளாகி வருகிறார். பாலியல் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். 20 நாட்களுக்கு மேலாக அவருக்கு ஜாமீன் கொடுக்கப்படாமல் உள்ளார். ஒரு பயங்கரவாத கும்பலால் உனது புகைப்படம் எரிக்கப்பட்டது வித்தியாசமானது. நாங்கள் இந்தியாவில் வாழ்ந்தால் அவர்கள் எங்களை என்ன செய்வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்” என ட்வீட் செய்துள்ளார் மீனா ஹாரிஸ்.
சிறையில் உள்ள நவ்தீப் கவுர் பாலியல் ரீதியிலான சீண்டல்களுக்கும் ஆளாகி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
நன்றி : India Times