விப்ரோவின் புதிய செயல்தலைவர் ரிஷாத் பிரேம்ஜி - யார் இவர்?

விப்ரோவின் புதிய செயல்தலைவர் ரிஷாத் பிரேம்ஜி - யார் இவர்?
விப்ரோவின் புதிய செயல்தலைவர் ரிஷாத் பிரேம்ஜி - யார் இவர்?
Published on

குஜராத் மாநிலத்தில் பிறந்த அசிம் பிரேம்ஜி, தன்னுடைய தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தால் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோவை உருவாக்கியவர். மென்பொருள் உலகின் சக்கரவர்த்தி எனவும் இவர் அறியப்படுகிறார். இவ்வாறு அரைநூற்றாண்டு காலமாக விப்ரோவை வழிநடத்தி வந்த அசிம் பிரேம்ஜி தற்போது அதன் செயல்தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். 

அதன்படி அவர் வரும் ஜூன் 30ஆம் தேதி இந்தப் பதவிலிருந்து விலகவுள்ளார். இவரைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பில் அவரது மூத்த மகனான ரிஷாத் பிரேம்ஜி ஏற்கவுள்ளார். இந்நிலையில் ரிஷாத் பிரேம்ஜி கடந்த வந்த பாதை குறித்து பார்ப்போம். 

ரிஷாத் பிரேம்ஜி ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பை முடித்தார். பட்டப்படிப்பை முடித்தவுடன் இவர் ‘பிரைன் அண்ட் கோ’ என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் விப்ரோவில் பணிபுரிந்து வருகிறார். இவர் விப்ரோவில் பணிபுரிய நேர்காணல் மூலம் தான் தேர்வாகியுள்ளார். மேலும் அப்போதைய சிஇஒ கிரிஷ் அவரை நேர்காணல் செய்தது குறிப்பிடத்தக்கது. 

அதன்பின்னர் 2010ஆம் ஆண்டு இவர் விப்ரோவின் உத்திகளை வகுக்கும் தலைமை அதிகாரியாக பணி உயர்த்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து விப்ரோ வெஞ்சரஸ் என்ற 100 மில்லியன் டாலர் நிதி அமைப்பதற்கு மூளையாக செயல்பட்டார். இவர் விப்ரோ மற்றும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ஆகிய குழுக்களில் சேர்க்கப்பட்டார். ரிஷாத் பிரேம்ஜியின் வழிநடத்தல் மற்றும் நிர்வாகத் திறமை ஆகியவற்றை பார்த்து 2014ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றம் இளம் தலைவர் என்ற அங்கீகாரத்தை இவருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com