தெலங்கானாவில் சொல்லி அடித்த கில்லி! யார் இந்த ரேவந்த் ரெட்டி? பிஆர்எஸ்-ஐ வீழ்த்தியது எப்படி?

தெலங்கனாவில் இப்போதே 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகுக்கும் நிலையில், இந்த வெற்றிப் பாதைக்கு ரேவந்த் ரெட்டியின் வியூகங்கள் மற்றும் இவருக்கும், ஆளும் பிஆர் எஸ்ஸுக்கும் இடையேயான மோதலை சுருக்கமாக பார்க்கலாம்.
Revanth Reddy
Revanth Reddy file image
Published on

தெலங்கானா மாநிலம் உருவானது முதல் தொடர்ந்து 2 முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த பிஆர் எஸ் கட்சியை வீழ்த்த, அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித்தலைவர் முக்கிய பங்காற்றியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்ய டி,கே சிவக்குமார் எப்படி செயல்பட்டாரோ அதேபோல், தெலங்கானாவில் வெற்றிக்கனியை பறிக்க வியூகம் அமைத்து விளையாடியவர்தான் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி. இப்போதே 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகுக்கும் நிலையில், இந்த வெற்றிப் பாதைக்கு ரேவந்த் ரெட்டியின் வியூகங்கள் மற்றும் இவருக்கும், ஆளும் பிஆர் எஸ்ஸுக்கும் இடையேயான மோதலை சுருக்கமாக பார்க்கலாம்.

Revanth Reddy
தொடங்கியது 4 மாநிலத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை! எங்கு என்ன நிலவரம்?

119 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில், காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்கிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள். முடிவுகள் இன்று மாலை முழுவதுமாக தெரியவரும் நிலையில், ஏற்கனவே ஆட்சிக்கட்டிலில் அமர தயாராக இருக்குமாறு கூறியுள்ளார் ரேவந்த் ரெட்டி.

காங்கிரஸை ஆட்சியில் அமரவைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள ரேவந்த் ரெட்டியின் அரசியல் பயணம் தொடங்கியது தெலுங்கு தேசம் கட்சியில்தான். ஆம், 2004ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தவர், ஒருங்கிணைந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் 2009ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து, 2014லும் வெற்றிபெற்ற அவர், 2017ம் ஆண்டு காங்கிரஸில் குதித்தார். தன்னை ஒரு களப்போராளியாக தலைமைக்கு நெருக்கமாக காட்டிக்கொண்டவர், 2021ம் ஆண்டு மாநில காங்கிரஸ் கட்சித்தலைவராகவும் உயர்த்திக்கொண்டார்.

காங்கிரஸில் சேர்ந்தபோது, பிரிக்கப்பட்ட தெலங்கானாவில் முதல்முறையாக கோடங்கல் தொகுதியில் போட்டியிட்டவர், பிஆர்எஸ் கட்சியியால் தோற்கடிக்கப்பட்டார். இவரை வீழ்த்தவே, வண்டிகளில் ஆட்களை அழைத்துவந்து ஓட்டு பிஆர் எஸ் கட்சியினர் ஓட்டுபோட வைத்த சம்பவமும் நடந்தது. சட்டமன்ற தேர்தலில் தோற்றாலும், 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 சதவீத வாக்குகளை பெற்று வென்று எம்.பியானார்.

என்னதான் எம்பியாக இருந்தாலும், தன்னைத்தோற்கடித்த பிஆர் எஸ் கட்சியை, அந்த கட்சியின் தலைமையை வீழ்த்துவேன் என்று சந்திரசேகரராவ் போட்டியிட்ட அதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார் ரேவந்த். அதன்படி, கம்மாரெட்டி தொகுதியில் கேசிஆர் ஐ வீழ்த்தி மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியையே வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலில் அமரும் என்று உறுதியாக நம்பி வருகிறார் ரேவந்த் ரெட்டி.

சந்திரசேகர ராவ் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், தெலங்கானாவில் சொல்லி அடித்திருக்கிறார் ரேவந்த் ரெட்டி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com