மகாராஷ்ட்ரா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்ணோய்! யார் இவர்?

மகராஷ்டிராவில் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் படுகொலை. இதற்கு பிரபல நிழல் உலக தாதாவான லாரன்ஸ் பிஷ்ணோய் பொறுப்பேற்றுள்ளார். யார் இவர்?பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்...
பாபா சித்திக் - லாரன்ஸ் பிஷ்ணோய் - சல்மான் கான்
பாபா சித்திக் - லாரன்ஸ் பிஷ்ணோய் - சல்மான் கான்PT Web
Published on

லாரன்ஸ் பிஷ்ணோய்... இவர்தான் அந்த நிழல் உலக தாதா... நாட்டின் தலைநகரில் குற்றங்களின் பிம்பமாகவும், நிழல் உலகில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும் சூத்திரதாரியாக இருப்பவர். கடந்த ஏப்ரல் மாதம் பாலிவுட் பாட்ஷா சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கும் லாரன்ஸ் பிஷ்ணோய்தான் காரணகர்த்தா.

யார் இந்த லாரன்ஸ் பிஷ்ணோய்...

லாரன்ஸ் பிஷ்ணோய்
லாரன்ஸ் பிஷ்ணோய்

பஞ்சாப்பில் அபோஹர் என்ற இடத்தில் 1993 ல் பிறந்த இவர், 2010க்கு பிறகு சண்டிகருக்கு இடம்பெயர்ந்துள்ளார். அங்கு DAV கல்லூரியில் பயின்றுள்ளார். பின்னர் பஞ்சாப் பல்கலைக்கழக வளாக மாணவர் கவுன்சிலில் இணைந்து செயல்பட்டுள்ளார். கல்லூரிக் காலத்தில் கோல்டி பிரார் என்ற கேங்ஸ்டருடன் இணைந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார் லாரன்ஸ் பிஷ்ணோய். இவர் மீது, கொலை, மிரட்டி பணம் பறித்தல், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பது, கடத்தல் உள்பட அடுக்கடுக்காக 30க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பாபா சித்திக் - லாரன்ஸ் பிஷ்ணோய் - சல்மான் கான்
மும்பையை உலுக்கிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலை! பின்னணி என்ன?

கோல்டி பிரார் - பிஷ்ணோய் கேங்க், முழுக்க முழுக்க குற்றப்பின்னணி கொண்ட குழு என்றும், இவர்களுக்கு காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றும் தேசிய புனாய்வு முகமை கூறுகிறது. இன்னும் கொஞ்சம் நினைவுகூர்ந்தால், 2022ல் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையின் சூத்திரதாரி லாரன்ஸ் பிஷ்ணோய்தான்.

லாரன்ஸ் பிஷ்ணோய் - சித்து மூஸ்வாலா
லாரன்ஸ் பிஷ்ணோய் - சித்து மூஸ்வாலா

மற்றொரு பஞ்சாப் பாடகர் ஜிப்பி கிரேவல் வீட்டிலும் துப்பாக்கிச்சூடு நடத்தினார். ராஜஸ்தானில், ராஜபுத்திரர்களின் அமைப்பான கர்னி சேனாவின் தலைவராக இருந்த சுகதேவ் சிங் 2023 ஆம் ஆண்டில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் தொடர்புடையவர். பாலிவுட் சினிமா ஸ்டார் ஹீரோ சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் இவர்தான். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்ற சல்மான் கான், அரிய வகை மானை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், சல்மான்கான் மீது தாளாத கோபத்தில் இருந்தவர் லாரன்ஸ் பிஷ்ணோய். பிஷ்ணோய் சமூக மக்கள் மான்களை தெய்வமாக, புனிதமாக கருதி வணங்குகின்றனர். இப்படியிருக்கும்போது, மான்களை சல்மான் கான் வேட்டையாடியதால், அவர் மீது வன்மம் கொண்டுள்ளார் லாரன்ஸ் பிஷ்ணோய். அதற்காக, சல்மானை கொன்றே தீருவேன் என சூளுரைத்து கடிதம் அனுப்பியதெல்லாம் நடந்தது.

பாபா சித்திக் - லாரன்ஸ் பிஷ்ணோய் - சல்மான் கான்
ஒரு மாதகால திட்டம்.. பாபா சித்திக் கொலையில் அதிர்ச்சி தகவல்கள்.. சல்மான்கான் வீட்டுக்கு பாதுகாப்பு

இதில் என்ன அதிர்ச்சி என்றால், இந்த கொலைகளும் தாக்குதல்களும் மிரட்டல்களும் அரங்கேறிய நேரங்களில், லாரன்ஸ் பிஷ்ணோய் சிறையில்தான் இருந்திருக்கிறார். சிறையில் இருந்தாலும், தாம் நினைக்கும் அத்தனையையும் செய்து முடிக்க, தனக்கென ஒரு கூலிப்படையையே வைத்து, சிறையில் இருந்தே இயக்கி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

கனடாவில் உள்ள கூட்டாளி, கோல்டி பிராரின் மூலம், உதவிகள் வருவதாகவும் சொல்லப்படுகிறது. தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்பட, பணம் படைத்தவர்களைக் கடத்திச் சென்று, துப்பாக்கிமுனையில் மிரட்டி பணம் பறிப்பதும், கொலை செய்வதும் இவருக்கு சாதாரணம். டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில், நடக்கும் ஒவ்வொரு குற்றங்களிலும் லாரன்ஸ் பிஷ்ணோய்க்கு தொடர்பிருக்கிறது. இவரது கேங்கில், இலக்கை துல்லியமாக குறி பார்த்து சுட்டு கொல்லும் 'ஸ்னைப்பர்கள்' 700க்கும் அதிகமானோர் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை கூறுகிறது.

பாபா சித்திக் - லாரன்ஸ் பிஷ்ணோய் - சல்மான் கான்
டெல்லி-பஞ்சாப்-ஹரியானா |குற்றங்களுக்கான சூத்திரதாரி.. நிழல் உலக தாதா.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?

நீண்ட நாள்கள் சிறையில் இருப்பதால், ஏற்கனவே சிறையில் இருக்கும் குற்றப்பின்னணி கொண்டவர்களை, கூட்டு சேர்த்துக் கொள்வது இவரது ஸ்டைல். இதற்காகவே, சிறையில் வெவ்வேறு அறைகளுக்கு இவரை மாற்றி வருகிறார்கள் சிறை அதிகாரிகள். தலைநகர் டெல்லியில் ஜிம் உரிமையாளரை, இருசக்கர வாகனத்தில் சென்று சுட்டுக்கொன்றவர்களும் இவருடைய கும்பலைச் சேர்ந்தவர்கள்தான். இதனால் குற்றவாளிகளைத் தேடும் பணியை டெல்லி காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com