2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் முறையே இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 1 மற்றும் 2வது இடங்களைப் பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி இருந்த போதிலும், உலகெங்கிலும் உள்ள பில்லியனர்களின் வருடாந்திர தரவரிசை பட்டியலில் பல இந்தியர்கள் இருந்தனர். ஃபோர்ப்ஸின் 2022 ஆம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிகள், அதானிகள், மிட்டல்கள் மற்றும் பிர்லாக்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.
டாப் 10 பணக்காரர்கள்:
1. முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான அம்பானி, 90.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும், உலகின் பத்தாவது பணக்காரராகவும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
2. கௌதம் அதானி
இப்போது ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அதானி, உள்கட்டமைப்பு மற்றும் பண்டங்களின் கூட்டமைப்புக்கு தலைமை வகிக்கிறார். இவரது நிகர மதிப்பு $90 பில்லியன். அவர் உலக தரவரிசையில் 11வது இடத்தில் உள்ளார்.
3. ஷிவ் நாடார்
HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனர் ஷிவ் நாடார். இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர். அவரது சொத்துக்களை 22 சதவீதம் அதிகரித்துள்ளன. ஃபோர்ப்ஸ் படி, அவர் சொத்துக்களின் நிகர மதிப்பு $28.7 பில்லியன். அவர் உலக தரவரிசையில் 47வது இடத்தில் உள்ளார்.
4. சைரஸ் பூனவாலா
கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்குப் பின்னால் இருந்தவர், பூனவாலா. தனது சொத்துமதிப்பை இருமடங்காக உயர்த்தியுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 24.3 பில்லியன் டாலர்கள். மேலும் அவரது முந்தைய தரவரிசையில் இருந்து நான்கு இடங்கள் உயர்ந்தார். உலக தரவரிசையில் 56வது இடத்தில் உள்ளார்.
5. ராதாகிஷன் தமானி
உலக அளவில் 81வது இடத்தில் உள்ள தமானி, நாடு முழுவதும் டி-மார்ட்களை இயக்கும் அவென்யூ சூப்பர் மார்க்கெட்களை நிறுவி, 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.
6. லட்சுமி மிட்டல்
உலகின் மிகப்பெரிய எஃகு மற்றும் சுரங்க உற்பத்தி நிறுவனமான ஆர்செலர் மிட்டலின் தலைவரான லக்ஷ்மியின் நிகர மதிப்பு $17.9 பில்லியன் மற்றும் உலக அளவில் 89வது இடத்தில் உள்ளது.
7. சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பம்
OP ஜிண்டால் குழுமத்தின் எஃகு மற்றும் சக்தி நிறுவனமான சாவித்ரியின் நிகர சொத்து மதிப்பு $17.7 பில்லியன் மற்றும் உலக அளவில் 91வது இடத்தில் உள்ளது. முதல் 10 பணக்கார இந்தியர்களில் உள்ள ஒரே பெண் மற்றும் பில்லியனர்கள் பட்டியலில் உள்ள 13 இந்திய பெண்களில் ஒருவர்.
8. குமார் பிர்லா
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர், குமார் உலகில் 109 வது இடத்தில் உள்ளார் மற்றும் நிகர சொத்து மதிப்பு $16.5 பில்லியன்.
9. திலீப் ஷங்வி
உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில், சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்குப் பின்னால், உலகில் 115 வது இடத்தில் இருப்பவர் ஷாங்வி. இவரது சொத்து மதிப்பு $15.6 பில்லியன்.
10. உதய் கோடக்
கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக் 10வது இடத்தில் உள்ளார். இவரை "இந்தியாவின் சுயமாக உருவான பணக்கார வங்கியாளர்" என்று போரப்ஸ் அழைக்கிறது. உலக அளவில் 129வது இடத்தில் உள்ளார் மற்றும் நிகர மதிப்பு $14.3 பில்லியன் கொண்டுள்ளார்.