இன்று இரவு பதவியேற்பு; மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்? வெளியான புதிய தகவல்

இன்று மாலை 7 மணி அளவில் 3 ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள சூழலில், புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் யார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்
மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்புதிய தலைமுறை
Published on

இன்று மாலை 7 மணி அளவில் 3 ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கவுள்ள சூழலில், புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் யார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

18 ஆவது மக்களவையின் தேர்தல் முடிவுகள் கடந்த ஜீன் 4 ஆம் தேதி வெளியானது. இதில், 240 இடங்களை கைப்பற்றிய பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு 293 என்று பெரும்பான்மையை பெற்ற நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்தவகையில், நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. ஆக, வெயிலின் தாக்கம் காரணமாக இரவு 7.15 மணியளவில் பதவிப்பிரமாணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள சூழலில், அவருடன் புதிய அமைச்சரவையின் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இதன்படி, புதிய அமைச்சரவையில் பாஜகவிலிருந்து அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்ஷங்கர், பியூஷ்கோயலுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தவகையில், புதிய அமைச்சரவையில் இடம்பெற போவது யார் யார் என்று வெளியான தகவல்கள் என்ன என்பதை காணலாம்.

பாஜகவிலிருந்து அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், ஜெய்சங்கர், ஜோதிராதித்ய சிந்தியா, அர்ஜீன்ராம் மேஹ்வால், சர்பானந்த சோனாவால், பிரகலாத் ஜோஷி, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கேபினெட் அமைச்சர்களாக இடம்பெறுவதாக தகவல்.

மேலும், கடந்த 2014, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் பாஜக தனிப்பெரும்பான்மையை பெற்ற சூழலில்,கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவையில்லாத சூழல் இருந்தது. ஆனால், தற்போது கூட்டணி கட்சியோடு கூடிய ஆட்சி நடைபெற இருப்பதால், கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் புதிய அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.

இதன்படி,

கூட்டணி கட்சியின் கேபினட் அமைச்சர்கள்

கூட்டணி கட்சிகளை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த குமாராசாமி,

லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பஸ்வான்,

தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து ராம் மோகன் நாயுடு, சந்திர சேகர்

ஜக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜிவ் ரஞ்சன் சிங் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

இணை அமைச்சர்கள்

அப்னா தளம் கட்சியின் அனுப்பிரியா படேல்

ஜீதன் ராம் மாஞ்சி,

ஏகாநாத் ஷிண்டேவின் சிவசேனாவிலிருந்து ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோருக்கு இணை அமைச்சர்கள் பதவி கிடைக்க வாய்ப்பு.

மேலும், ஜன சேனா கட்சியை சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com