அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருந்தாலும் கூட பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் அவசியம் இல்லை. அது என்னென்ன விஷயங்கள் என இங்கே தெரிந்து கொள்வோம்.
* கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.
* வங்கிக் கணக்குகள் திறக்க ஆதார் அட்டை அவசியம் இல்லை
* வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை
* மொபைல் எண்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை.
* சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும் ஆதார் கட்டாய தேவை கிடையாது
* பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அவசியம் இல்லை
* தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது
* ஆதார் இல்லை என்பதற்காக தனி நபரின் உரிமைகள் மறுக்கபடக்கூடாது
கட்டாய அவசியம்
பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்