தெலங்கானா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையக் குழு வரும் 11ஆம் தேதி அம்மாநிலத்திற்கு செல்கிறது.
தெலுங்கானா சட்டப்பேரவைக்கான பதவிக்காலம், முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், நேற்று முன்தினம் பேரவை கலைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து டெல்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணையக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தெலுங்கானாவில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, நேரடியாக ஆய்வு செய்ய துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா தலைமையிலான அதிகாரிகள் குழு ஐதராபாத் செல்கிறது. 11ஆம் தேதி ஆய்வு செய்யும் இக்குழு, தனது அறிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் சமர்பிக்கவுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தெலங்கனாவில் எப்போது தேர்தலை நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவு செய்யவுள்ளது.
இதனிடையே நம்பவரில் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறலாம் என்று வெளியான தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் மறுத்துள்ளார். நவம்பரில் தேர்தல் நடைபெறும் எனக் கூறிய தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.