வாட்ஸ் அப்பில் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் பெயர்கள், விவரங்கள் இன்னும் அரசுக்கு கிடைக்கப் பெறவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங், மாநிலங்களவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் நிறுவன தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். நவம்பர் 18-ஆம் தேதி வாட்ஸ் அப் நிறுவனம் பதில் அளித்ததாகவும், கூடுதல் விவரங்கள் தருமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
ஆனால் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் பெயர்கள், விவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பெகாசஸ் மென்பொருள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த விவரங்கள் கேட்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.