உலகப்போர்? | ATACMS-ஐ பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி.. ரஷ்யா எதிர்ப்பு.. இனி என்ன நடக்கும்?

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ர‌ஷ்யாவினுள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஜெலன்ஸ்கி, பைடன், ட்ரம்ப், புதின்
ஜெலன்ஸ்கி, பைடன், ட்ரம்ப், புதின்எக்ஸ் தளம்
Published on

உக்ரைனில் 2 ஆண்டுகளைக் கடந்து நடைபெறும் போர்

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருவதாகச் செய்திகள் வெளியாகின.

உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர்

இஸ்ரேல் - காஸாவிலும் ஓராண்டாகத் தொடரும் போர்

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில்தான் இஸ்ரேல் அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் - காஸா இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்றுவரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இந்த 4 நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்படலாம் என்ற பேச்சும் உலா வருகிறது. அடுத்த அதிபராகப் பதவியேற்கவுள்ள ட்ரம்ப், போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வழிமுறைகளைக் கையாளுவேன் என உறுதியளித்திருந்தார்.

இதையும் படிக்க: தினசரி ஒரு மில்லியன்.. X தளத்திலிருந்து வெளியேறி Blueskyயில் இணையும் பயனர்கள்.. காரணம் இதுதான்!

ஜெலன்ஸ்கி, பைடன், ட்ரம்ப், புதின்
’Feb 24, 2022’ - 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கும் ரஷ்யா - உக்ரைன் போர்; ஆதிக்கம் செலுத்துவது யார்?

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு தாக்க உக்ரைனுக்கு அனுமதி

இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ர‌ஷ்யாவினுள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, வரும்நாட்களில் உக்ரைன் முதன்முறையாக ர‌ஷ்யா மீது தொலைதூரத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எல்லைப் பகுதியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கும் ர‌ஷ்ய ராணுவப் பகுதிகளின்மீது தாக்குதல் நடத்த வகைசெய்ய அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வந்தார்.

பைடன், ஜெலன்ஸ்கி
பைடன், ஜெலன்ஸ்கி

ஆனாலும், அமெரிக்கா இந்த விஷயத்தில் மவுனம் காத்து வந்தது. இதற்குக் காரணம், ரஷ்யா இதைவிட அதிகமான ஆயுதங்களை இறக்கக்கூடும் என்பதே ஆகும்.

இந்த நிலையில், கடந்த மாதங்களில் உக்ரைன் எதிரான போரில் ரஷ்யா ராணுவத்திற்கு ஆதரவாக வடகொரியா அரசாங்கம் தன் நாட்டு 10 ஆயிரம் ராணுவ படைவீரர்களை அனுப்பியிருந்ததாக வடகொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுதிப்படுத்தியிருந்தன. இது, அமெரிக்காவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையும் படிக்க: ”புதிய ஆட்சியுடன் இணைந்து செயல்பட தயார்” - ஜோ பைடனிடம் தெரிவித்த ஜின்பிங்.. ட்ரம்பின் திட்டம் என்ன?

ஜெலன்ஸ்கி, பைடன், ட்ரம்ப், புதின்
ட்ரம்ப்-க்கு வாழ்த்து தெரிவித்த புதின்| முடிவுக்கு வருமா உக்ரைன் போர்.. கடந்தகால அரசியல் சொல்வதென்ன?

அனுமதி அளித்ததற்குக் காரணம் என்ன?

இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் அரசாங்கம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ர‌ஷ்யாவினுள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளது. பல மாதங்களாக நட்பு நாடுகள் தனக்குப் போதுமான ஆதரவை வழங்கவில்லை என உக்ரைன் கூறிவருகிறது.

இந்தச் சூழலில்தான் வரும் ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ பைடன், அதற்குள் உக்ரைனுக்கான உதவிகளை விரைவுபடுத்த முயன்று வருகிறார் என பேச்சுகளும் எழுந்துள்ளன. அதேநேரத்தில், அமெரிக்க அதிபர் பைடனின் இந்த திடீர் முடிவால், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரஷ்யாவிற்குள் நீண்ட தூர ‘ஸ்டார்ம் ஷேடோ’ (Storm shadow) ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி அளிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. என்றாலும், பைடனின் முடிவுக்கு பிரிட்டன் அல்லது பிரான்ஸ் இதுவரை பதிலளிக்கவில்லை. இதனால் உலக நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பைடன், புதின்
பைடன், புதின்

அனுமதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன், தங்களைத் தாக்க அமெரிக்கா அனுமதி அளித்தால் அது போரை மிகவும் மோசமடையச் செய்யும் நடவடிக்கையாகும்” என ர‌ஷ்யா எச்சரித்துள்ளது. அதேநேரத்தில், ’’ர‌ஷ்யாவினுள் தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி அளிக்க முடிவுசெய்வது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக்கூடும்’’ என்று ர‌ஷ்ய மேலவையின் அனைத்துலக விவகாரப் பிரிவின் முதல் இணைத் தலைவரான விளாடிமிர் ட்‌ஷாபாரொவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”எங்களுக்கு ஒரு ட்ரம்ப் தேவை; அதே வகையான புரட்சி..”-பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் எலிசபெத் லிஸ் ட்ரஸ்!

ஜெலன்ஸ்கி, பைடன், ட்ரம்ப், புதின்
“புதின் ஒரு போர் குற்றவாளி” - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

போர் குறித்து ட்ரம்ப் தரப்பு சொல்வது என்ன?

என்றாலும், அதிபராகப் பதவியேற்கவுள்ள ட்ரம்ப் நிர்வாகம் போர் நிறுத்தத்தையே பெரிதாக விரும்புகிறது. மேலும், அமெரிக்க ராணுவ கட்டமைப்பைத்தான் பலப்படுத்த விரும்புகிறது. இதனால், போர் நடைபெறும் பிற நாடுகளுக்கு நிதியுதவி அளிக்கவோ அல்லது ஆயுத உதவி வழங்கவோ அவ்வரசுக்கு விருப்பமில்லை. இதை, அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ட்ரம்ப் உறுதியாகத் தெரிவித்திருந்தார். ட்ரம்ப் ஆட்சியில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய மருமகனான ஜே.டி.வான்ஸும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர், “உக்ரைனுக்கு அமெரிக்கா இனி எந்த ராணுவ உதவியும் வழங்கக்கூடாது” என எச்சரித்திருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்எக்ஸ் தளம்

ATACMS என்றால் என்ன?

அமெரிக்கா, கடந்த ஆண்டு உக்ரைனுக்கு ATACMS என்ற ஏவுகணைகளை வழங்கியது. இது, ’அட்டாக் எம்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. லாக்ஹீட் மார்ட்டினால் தயாரிக்கப்பட்ட இது, மிகவும் சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இந்த ஏவுகணை, 190 மைல் தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கக்கூடியது. ATACMS ஏவுகணை 1980களில், சோவியத் இலக்குகளின் எதிரிகளை ஆழமாக அழிக்க உருவாக்கப்பட்டது. ஒருவேளை, இந்த ஏவுகணைகள் ஆரம்பத்தில் ரஷ்ய மற்றும் வட கொரிய துருப்புகளுக்கு எதிராக, மேற்கு ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்படலாம்.

ATACMS
ATACMS

உக்ரைனுக்கு அமெரிக்க அளித்த ஆயுதங்களின் மதிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிகளவு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்காவே முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான உலகப் பொருளாதாரத்திற்கான கீல் கழகத்தின் தகவலின்படி, ’2022 பிப்ரவரி போரின் தொடக்கத்திற்கும் ஜூன் 2024 இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், உக்ரைனுக்கு 55.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அனுப்புவதற்கு அமெரிக்கா உறுதியளித்தது’ என தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா தேர்தல்|கடும் போட்டியில் இரண்டுகூட்டணி; மீண்டும் காத்திருக்கும் முதல்வர் பதவி பஞ்சாயத்து

ஜெலன்ஸ்கி, பைடன், ட்ரம்ப், புதின்
உக்ரைன் போர்|’ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய 12,000 வடகொரிய ராணுவ வீரர்கள்’- தென்கொரியா குற்றச்சாட்டு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com