ரேபரேலி தொகுதியில் ட்விஸ்ட்! ராகுலுக்கு சீட்.. பிரியங்கா களமிறங்காதது ஏன்? காங். போடும் கணக்கு என்ன?

ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
ராகுல், பிரியங்கா
ராகுல், பிரியங்காட்விட்டர்
Published on

கணபதி சுப்ரமணியம்

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி அவரை களத்தில் இறக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது, உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும் அமேதி தொகுதியிலும் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை.

ராகுல், பிரியங்கா
ராகுல், பிரியங்காட்விட்டர்

இந்த முடிவுக்கு காரணம் என்ன? பிரியங்கா காந்தி பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் செய்வது முக்கியம் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ’பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான பதில் அளித்து வருகிறார் பிரியங்கா’ என காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிட்டால் பிரியங்கா காந்தி அவரது தொகுதியில் மட்டுமே அதிக நேரத்தைச் செலவிடும் சூழல் ஏற்படும் எனவும், அடுத்தகட்ட வாக்கெடுப்பு நடைபெற உள்ள தொகுதிகளில் பிரசாரம் செய்வது இதனால் பாதிக்கப்படும் என்பதும் காங்கிரஸ் கட்சி தலைமையின் கருத்து. தேவைப்பட்டால் பிரியங்கா காந்தி பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்குச் செல்லலாம் எனவும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருதுகின்றனர். அதேசமயத்தில், பாரதிய ஜனதா கட்சி தலைவர்களின் கருத்து வேறுவிதமாக உள்ளது.

இதையும் படிக்க: அமேதி நேரு குடும்பத்தின் கோட்டை ஆனது எப்படி? சுவாரஸ்ய வரலாறு!

ராகுல், பிரியங்கா
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி... காங்கிரஸ் தலைமை அதிரடி அறிவிப்பு!

அமேதி தொகுதியில் போட்டியிட்டால் மீண்டும் தோல்வியே கிடைக்கும் என ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார் என பாஜக தலைவர்கள் நையாண்டி செய்து வருகின்றனர். சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் இந்த முறை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மக்களவைத் தேர்தல் போட்டியை தவிர்த்து ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்திகோப்புப்படம்

ரேபரேலி தொகுதியில் 1977ஆம் வருட மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்ததைத் தவிர்த்து, பிற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ச்சியாக வெற்றி கிடைத்து வந்துள்ளது. இதனால்தான் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது உத்தரப்பிரதேச அரசியல் தலைவர்களின் கணிப்பு. முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடும் சூழலில், அமேதி தொகுதியில் அவர் கடும் போட்டியைச் சந்திப்பது சரியான துவக்கமாக இருக்காது என்பதும் அவர்களது கருத்தாக உள்ளது. முதல் தேர்தலிலேயே பிரியங்கா காந்தி அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தால் அவரது அரசியல் பயணம் பாதிக்கப்படும் என அவர்கள் மேலும் கருத்து தெரிவித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் வலியுறுத்தல் காரணமாகவே ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் என கருதப்படுகிறது.

இதையும் படிக்க: மாங்கல்யம் சர்ச்சை பேச்சு| பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி!

ராகுல், பிரியங்கா
அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவாரா? ரேபரேலியில் யார்? - காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் குழப்பம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com