அமேதி To வயநாடு: பாஜகவைக் கண்டு பயமா? விமர்சிக்கும் கேரள சிபிஎம்; ராகுல் காந்தி தொகுதி மாறியது ஏன்?

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 2வது முறையும் போட்டியிடுவதை, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி கடுமையாக விமர்சித்துள்ளது.
ராகுல் காந்தி
ராகுல் காந்திட்விட்டர்
Published on

வயநாட்டில் மீண்டும் களமிறங்கும் ராகுல் காந்தி

உச்சி வெயில் சுட்டெரிக்கும் வேளையிலும் ஓடியோடி கட்சிக்காக வாக்குச் சேகரித்து வருகின்றனர் அரசியல் தலைவர்கள். இப்போது மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தால்தானே, இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்களவையில் ஓர் உறுப்பினராய் உட்கார முடியும். அதற்கான தீவிர பணிகளில்தான் அனைத்துக் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் தற்போதைய மக்களவைத் தேர்தலில், கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற வயநாடு தொகுதியும் ஒன்று. இவர், கடந்த தேர்தலில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். இந்த முறையும், அதே தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவர் இங்கே 2வது முறையும் போட்டியிடுவதை, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி கடுமையாக விமர்சித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கட்சியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் I-N-D-I-A கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுலை கடுமையாக விமர்சித்த பினராய் விஜயன்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன், ”I.N.D.I.A கூட்டணியில் உள்ள கட்சிக்கு எதிராகவே ராகுல்காந்தி களமிறங்குவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? பாஜகவுக்கு எதிராகப் போராட வேண்டிய நேரத்தில், ராகுல்காந்தி இடதுசாரிகளை எதிர்த்து நிற்பது ஏற்புடையதல்ல. காங்கிரஸின் இந்த பொருத்தமற்ற செயல் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் யாரை எதிர்த்துப் போராடுகிறார் ராகுல் காந்தி? கேரளாவில் (பாஜக வேட்பாளர்) கே.சுரேந்திரனை எதிர்த்து போட்டியிடுகிறார் என்று சொல்ல முடியுமா? பாஜகவை எதிர்த்து போராடுவதற்காக கேரளா வந்ததாகச் சொல்ல முடியுமா? கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு எதிர்த்து போட்டியிடவே அவர் இங்கு வருகிறார். ராகுல் காந்தி கேரளாவுக்கு வந்து அன்னி ராஜாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்” என்றார். இந்த பேட்டியின் மூலம் பாஜகவை பார்த்து ராகுல் காந்தி பயப்படுகிறாரா என்பதை மறைமுகமாக பினராயி விஜயன் கேட்டுள்ளார். இது, காங்கிரஸ் கட்சியை தர்மசங்கடத்தில் தள்ளியுள்ளது.

இதையும் படிக்க: ரூ.17,545 கோடி To பூஜ்யம்: Forbes பட்டியலில் காணாமல்போன பைஜு ரவீந்திரன்..ஒரே ஆண்டில் சரிந்த மதிப்பு!

ராகுல் காந்தி
வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்.. பிரமாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மும்முனைப் போட்டியில் வயநாடு தொகுதி

ராகுல் காந்தி வயநாட்டில் மீண்டும் போட்டியிடுவதால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. I.N.D.I.A கூட்டணியிலேயே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தாலும் சில மாநிலங்களில் இணைந்து போட்டியிடவில்லை. அதேதான் கேரளாவிலும் தொடர்கிறது. கேரளாவைப் பொறுத்தவரை ஆளும் கம்யூனிஸ்ட்டுக்கும் காங்கிரஸுக்கும் இடையே அதிக போட்டி உள்ளது. இதனால்தான் ஆளும் கம்யூனிஸ்ட் வயநாட்டில் மீண்டும் களமிறங்கி இருக்கும் ராகுலை கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சி, “காங்கிரஸ் கட்சி பாஜகவைதான் எதிர்க்கிறது எனில் அவர்கள் ஏன் உத்தரப் பிரதேசத்திலும், குஜராத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் போட்டியிடக்கூடாது? . I.N.D.I.A கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் வலுகாக உள்ள கேரளாவில் ஏன் போட்டியிடுகிறது? கேரளாவில் பிரசாரம் செய்யும் ராகுல் யாருக்கு எதிராக பேசப்போகிறார்” எனக் கடுமையாக விமர்சித்து வருகிறது.

காங்கிரஸின் கோட்டையான அமேதியைக் கைப்பற்றிய பாஜக

1967ஆம் ஆண்டுமுதல் உத்தரப்பிரதேச அமேதி மக்களவைத் தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி 1980இல் அமேதி தொகுதியில் வெற்றி பெற்றார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது சகோதரரும் ராகுலின் தந்தையுமான ராஜீவ் 1981இல் அமேதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார். தொடர்ந்து 1991 வரை அந்தத் தொகுதியின் நாயகனாக இருந்தார். அடுத்து, அவரது மனைவி சோனியா காந்தி 1999இல் அமேதியில் இருந்து எம்பி ஆனார். அதன்பிறகு அவரது மகன் ராகுல் காந்தி 2004இல் அந்த தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். அதுமுதல் கடந்த 2019 வரை எம்பியாக இருந்தார். ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வியைத் தழுவினார். 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் தோல்வியடைந்தது, அந்த தொகுதியில் காங்கிரஸின் சகாப்தத்தையே முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும், இன்றும் பல மூத்த தலைவர்கள் அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!

ராகுல் காந்தி
'அமேதி என் குடும்பம்' - ராகுல் காந்தி உருக்கமான கடிதம்

அமேதியில் ராகுலை மீண்டும் போட்டியிட வற்புறுத்திய தலைவர்கள்

சில நாட்களுக்கு முன்னர் பாரத் ஜோடோ யாத்திரையின்போது, ”ராகுல் காந்திக்கு அமேதியுடன் ஆழமான தொடர்பு உள்ளது” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சூசகமாக தெரிவித்திருந்தார். அதுபோல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “2019இல் தவறு செய்துவிட்டோம் என மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். இங்கு, ராகுல் காந்தியை திரும்பப் பெற விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார். அதேபோல் உத்தரப் பிரதேச மூத்த தலைவர் அஜய் ராய், ”ராகுல் காந்தி வரும் தேர்தலில் அமேதியில் போட்டியிடுவார்” என நம்பிக்கை அளித்திருந்தார். என்றாலும், ”வருகிற தேர்தலில் ராகுல் காந்தி அமேதியில் மட்டும் போட்டியிடத் தயாரா” என ஸ்மிருதி இரானி சமீபத்தில் சவால் விட்டிருந்தார்.

ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானி
ராகுல் காந்தி, ஸ்மிருதி இரானிட்விட்டர்

அமேதி தொகுதியிலேயே வீட்டைக் கட்டிய ஸ்மிருதி இரானி

இதே ஸ்மிருதி இரானி, கடந்த 2014ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுலிடம் 1.07 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்தார். இருப்பினும் மனம்தளராத அவர், மக்களின் நன்மதிப்பை பெறுவதற்காக தொகுதிக்கு அடிக்கடி சென்றுவந்தார். அடுத்து 2019 தேர்தலில் அமேதியில் ஒரு மாதம் முகாமிட்டார் ஸ்மிருதி இரானி. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்பு, அமேதியின் கவுரிகஞ்ச் பகுதியில் உள்ள மேடன் மாவாய் கிராமத்தில் 2021ஆம் ஆண்டு இடம் ஒன்றை வாங்கி வீடு கட்டினார். தற்போது அந்த தொகுதியின் வாக்காளராகவும் மாறியிருக்கும் இரானி, அமேதியை தனது குடும்பமாக கருதுகிறார். அமேதி குடும்பத்தின் மத்தியில் வாழ்வதற்காகவே அவர் தனது குடியிருப்பை கட்டியிருப்பதாகவும் கூறுகிறார். தவிர, வளர்ச்சித் திட்டங்களையும் வாக்காளர்களுடனான தொடர்புகளையும் இரானி சிறப்பாகக் கையாண்டு வருகிறார்.

இதையும் படிக்க: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை - கைவிரித்த ஆப்பிள் நிர்வாகம்!

ராகுல் காந்தி
'அமேதி தொகுதி மக்களை ராகுல் அவமதித்து விட்டார்' : ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

ராகுல் மீண்டும் வயநாட்டுக்குச் சென்றது ஏன்?

ஆனால் கடந்த காலங்களில் காங்கிரஸின் சேவை, இந்த தொகுதி மக்களிடம் குறைந்துள்ளது. ஆக, பாஜகவின் ஆதிக்கம் அங்கு அதிகரிக்கத் தொடங்கிவிட்டதால் அதிலிருந்து காங்கிரஸை மீட்டெழுச் செய்வது சாதாரண விஷயமல்ல என்பதைப் புரிந்துகொண்டுதான் அக்கட்சி கேரளா பக்கம் ராகுலை திருப்பியிருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்திani

இதன் காரணமாகவே ராகுல் வயநாட்டை மீண்டும் தேர்வு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அதிலும் பாஜகவின் பலம் குறைந்த மாநிலங்களில் கேரளாவும் தமிழ்நாடுமே முன்னணியில் உள்ளன. இதனால்தான் காங்கிரஸ் இங்கு குறிவைத்து, அதிலும் கேரளாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. கேரளாவில் காங்கிரஸுக்கு என ஓரளவு வாக்குச் சதவிகிதம் இருப்பது மேலும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: “16 ஆண்டுகளாக RCB தோற்பதற்கு இதுதான் காரணம்” - அம்பத்தி ராயுடு

ராகுல் காந்தி
“EVM, மேட்ச் பிக்சிங், சமூக வலைதளங்கள் இல்லையென்றால் பாஜக வெற்றிபெறாது” - ராகுல் காந்தி காட்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com