டாடா அறக்கட்டளையின் புதிய தலைவர் நோயல் டாடா.. நியமிக்கப்பட காரணம் என்ன?

டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா தேர்ந்தெடுக்கப்பட காரணம் என்ன? பார்க்கலாம்.
நோயல் டாடா
நோயல் டாடாpt web
Published on

செய்தியாளர் கௌசல்யா

நேவல் டாடாவின் இன்னொரு மகன்தான் இந்த நோயல் டாடா, ரத்தன் டாடாவின் சகோதரர். டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர்தான் நோயல் டாடா. டாடா இண்டர்நேஷனல், ட்ரெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் வளர்ச்சியில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

1998ஆம் ஆண்டு ஒரே ஒரு கடையாக இருந்த ட்ரெண்ட்-ஐ நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட கிளைகளாக உருவாக முக்கிய காரணமாக இருந்தவர். டாடா இண்டர்நேஷனல், டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் தலைவராக உள்ள நோயல் டாடா, டைட்டன், டாடா ஸ்டீல் ஆகியவற்றின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

நோயல் டாடா
நோயல் டாடா

டாடா இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த நோயல் டாடா, 2010ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 15 கோடி ரூபாய் மதிப்பிலான இந்நிறுவனத்தை 2021ஆம் ஆண்டில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனமாக வளர்ச்சியடைய செய்தார். டாடா குழுமத்தின் கீழ் உள்ள சர் ரத்தன் டாடா ட்ரஸ்ட், சர் டோராப்ஜி டாடா ட்ரஸ்ட் ஆகியவற்றின் அறங்காவலராகவும் நோயல் டாடா இருக்கிறார். இந்த இரு அறக்கட்டளைகளும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவிகித பங்குகளை நிர்வகித்து வருகின்றன.

நோயல் டாடா
ஈரோடு: சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைது

இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் நோயல் டாடா. INSEAD BUSINESS SCHOOL-ல் சர்வதேச நிர்வாக திட்டத்தையும் படித்துள்ளார். நோயல் டாடாவின் மனைவி ஆலு மிஸ்ட்ரி, டாடா சன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான பல்லோன்ஜி மிஸ்திரியின் மகள். நோயல் டாடாவின் மகன் நெவில் டாடா ட்ரெண்ட், ஸ்டார் பஜார் ஆகியவைகளின் பொறுப்புகளை கவனித்து வருகிறார். அவரது மூத்த மகள் லியா டாடா தற்போது இந்தியன் ஹோட்டல் நிறுவனத்தின் துணை தலைவராக பணியாற்றுகிறார். மற்றொரு மகள் மாயா டாடா கேபிட்டல் நிறுவனத்தில் முக்கிய பணியில் இருக்கிறார்.

இவ்வாறு டாடா குழுமத்துடன் நெருங்கிய உறவு, வணிக அனுபவம் மற்றும் டாடா குழுமத்தில் பல்வேறு தலைமைப் பொறுப்பு வகித்தது போன்றவையே அவரை டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்க காரணமாக அமைந்திருக்கிறது. டாடா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அறக்கட்டளையின் தலைவராக நியமிப்பது என்பது பார்சி சமூகத்தின் நிலைப்பாடாக இருந்ததும் நோயல் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு காரணமாக கூறப்படுகிறது.

நோயல் டாடா
விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு ஆளுநர், முதலமைச்சர் பாராட்டு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com