இந்தியாவின் பிரபல பத்திரிகையான 'அவுட்லுக்' வெளியிட்ட சமீபத்திய அட்டைப்பக்கம் கவனம் ஈர்க்கும் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறியள்ளது.
நாட்டில் கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை வாட்டி வதைத்து வருகிறது. முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்புகளை விட இரண்டாம் அலையில் பாதிப்பு பல மடங்கு அதிகமாக இருப்பது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் அலை பாதிப்பு அதிகமானதற்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகளும். சர்வதேச ஊடகங்களும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பிரபல ஊடகமான 'அவுட்லுக்' பத்திரிக்கை தங்கள் சமீபத்திய இதழின் அட்டை பக்கத்தை, ''காணவில்லை' என்று சுவரொட்டி வடிவில் வெளியிட்டது. அதில் 'பெயர்: இந்திய அரசு, வயது: 7 ஆண்டுகள், தெரிவிக்கவேண்டிய நபர்: இந்திய குடிமக்கள்' எனவும் பதிவிட்டிருந்தது.
'இந்திய அரசை காணவில்லை' என உணர்த்தும் வகையில் இப்படி சுவரொட்டி வகையில் வெளியிட்டு இருந்தது. ஒரிஜினல் பாதிப்புகளின் பக்கத்தில் இந்த விளம்பரம் வெளியிட்டு இருந்த அதே வேளையில் ஆன்லைன் பதிப்பிலும் அதே விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், சிறிது நேரத்தில் ஆன்லைன் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த அட்டை பக்கம் நீக்கப்பட்டது. இதை கவனித்த மேற்கு வங்கத்தின் திரிணாமுல் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா, ''அவுட்லுக் அட்டைப்பக்கத்தில் 'இந்திய அரசாங்கத்தை காணவில்லை' என விளம்பரப்படுத்தப்பட்டது, அரசாங்கத்தின் அழுத்தத்தின் காரணமாக ஆன்லைன் அட்டைபக்கம் மாற்றப்பட்டுள்ளது" என்று ட்வீட் செய்திருந்தார். ஆன்லைனில் ''இந்திய அரசு காணவில்லை" என்ற அட்டைப் பக்கத்தை மாற்றியபின் சசி தரூர் போன்ற பலர் மற்றும் எழுத்தாளர்கள் தொடர்பான அட்டைப் பக்கத்தை அவுட்லுக் வைத்திருந்தது. இந்த இரண்டையும் குறிப்பிட்டு மஹுவா மொய்த்ரா ட்வீட் செய்ய, அது வைரலானது.
மொய்த்ராவின் ட்வீட் அதிகமாக பகிரப்பட்ட, இந்த பிரச்னை சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. இதையடுத்து, 'அவுட்லுக்' பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சுனில் மேனன் அளித்த பேட்டி ஒன்றில், ''ஆன்லைன் பதிப்பு மட்டுமே மாறிவிட்டது. ட்விட்டரில் பரபரப்பட்டு வரும் இந்தப் படம் ஒரு ஆன்லைன் விளம்பரமாகும்" என்று விளக்கம் கொடுத்து இருந்தார். ஆனால் அதற்கு பதில் கொடுத்த மொய்த்ரா, ''ஆன்லைன் விளம்பரத்தையும் மாற்ற வேண்டாம். கொரோனா காலங்களில் இதழின் நகல் சிலரால் மட்டுமே வாங்க முடியும். எனவே ஆன்லைன் அட்டைப்படம் நாட்களில் இருக்கும் அட்டையாக இருக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கம் கொடுத்த 'அவுட்லுக்' தலைமை நிர்வாக அதிகாரி இந்திரனில் ராய், ''அட்டை பக்கம் எப்படி சர்ச்சையில் சிக்கியது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. இருப்பினும் ஆன்லைன் பதிப்பில் எழுத்தாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தவும், அவர்களின் படங்களை ஆன்லைன் பதிப்பில் கட்டாயம் வைக்கவும் முடிவு செய்தோம். நாங்கள் முதல் முறையாக இப்படியொரு முறையை பின்பற்று. பிரதாப் பானு மேத்தா மற்றும் சசி தரூர் போன்ற பெயர்கள் நிச்சயமாக வாசகர்களைப் பெறும் என்பதால் எழுத்தாளர்கள் மூலம் அதிக கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறோம். அட்டை வைரலாகிவிட்டது, எனவே அதன் நோக்கம் நிறைவேறிவிட்டது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.