வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்pt web

மும்பை வடமேற்கு தொகுதி.. வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதா? நடந்தது என்ன?

மும்பை வடமேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான செய்தியை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், என்ன நடந்தது என விரிவாக பார்க்கலாம்....
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா வேட்பாளரை வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் ஷிண்டே பிரிவு சிவசேனா வேட்பாளர் கட்சி ரவீந்திர வைக்கர். ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்றதாக உத்தவ் தாக்கரே சிவசேனா தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.

அதாவது, ஒவ்வொரு சுற்றுக்கு பிறகும் வாக்குகள் பற்றிய அறிவிப்புகள் வெளியான நிலையில், 19-ஆவது சுற்றுக்கு பிறகு அந்த அறிவிப்பு நிறுத்தப்பட்டதாக உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் கிர்த்திகர் கூறியுள்ளார். 26-ஆவது சுற்று முடிந்ததும் வைக்கர் வெற்றி பெற்றதாக நேரடியாக அவர்கள் அறிவித்ததாகவும் கிர்த்திகர் கூறியுள்ளார். எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காத வகையில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு கோரி இருந்ததாகவும் ஆனால், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கிர்த்திகர் கூறினார்.

வாக்குப்பதிவு இயந்திரம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: புறக்கணித்த காரணம் சொன்ன இபிஎஸ்... மெல்ல மெல்ல சூடாகும் அரசியல் களம்!

மேலும், முறைகேடு நடைபெற்றதா என்பதை அறிய வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கேட்டு மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியும் தற்போதுவரை பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் கிர்த்திகர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விளக்கமளித்த மும்பை ஆட்சியர் ராஜேந்திரன் ஷிர்சாகர், வாக்கு எண்ணிக்கை மையத்தின் சிசிடிவி காட்சிகள் கிர்த்திகருக்கு கொடுக்கப்படாதது பற்றி தனக்கு தெரியவில்லை என்றும் அவருக்கு உரிய தகவல்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

வாக்குப்பதிவு இயந்திரம்
பதற்றத்திலேயே இருக்கும் மணிப்பூர்.. முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களின் மீதே நடந்த துப்பாக்கிச்சூடு

இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒருவர் செல்போனில் பேசியதாக இந்து சமாஜ் மற்றும் பாரத் ஜன் ஆதார் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். செல்போன் பயன்படுத்திய நபர், வெற்றிபெற்ற ரவீந்திர வைக்கருடன் தொடர்புடையவர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த புகார்கள் தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளிதழ்களில் வெளியான முறைகேடு புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள வடமேற்கு மும்பை தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்சி, மின்னணு இயந்திரம் தனித்து செயல்படக்கூடியது என்றும், அதனை செயல்பட வைக்க ஓடிபி தேவையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். தவறாக செய்தி வெளியிட்ட நாளிதழுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் வந்தனா தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரம்
உடலில் பிறை குறியுடன் ஆடு.. 2 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம்! #video
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com