வக்ஃப் சட்டத்திருத்த மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் முக்கிய முடிவு

சர்ச்சைக்குரிய வக்ஃப் மசோதாவை பரிசீலிக்க உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவானது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள்
நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள்pt web
Published on

நாடாளுமன்ற கூட்டுக்குழு: முதல் ஆலோசனை

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மக்களவையில் சிறுபான்மை துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘வக்ஃப் மசோதாவை பரிசீலிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு’வின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று (ஆக. 22) டெல்லியில் நடைபெற்றது. 31 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவின் ஆலோசனை கூட்டமானது, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் திமுகவின் ஆ ராசா மற்றும் முகமது அப்துல்லா உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஜகதாம்பிகா பால்
ஜகதாம்பிகா பால்pt web

இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முன் ஆஜராகி, தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினர். குறிப்பாக வக்ஃப் நிலங்களை பதிவு செய்வது மற்றும் நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துக்களின் பட்டியலை வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன என்பதை எடுத்துரைத்தனர்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள்
“யானைகளை அகற்றுங்கள்.. இல்லையெனில் மேல்நடவடிக்கைதான்..” - தவெக-விற்கு புது சிக்கல்..!

அதிகாரிகள் கொடுத்த விளக்கம்

உடன், இந்த மசோதா மூலம் சட்டத்தில் ஏற்படக்கூடிய மாறுதல்கள் குறித்து, சட்டத்துறை அதிகாரிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு விளக்கங்கள் அளித்தனர். அதேபோல சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் இந்த திருத்தங்களின் தாக்கம் எத்தகைய விளைவுகளை இஸ்லாமிய அமைப்புகளுக்கு உருவாக்கும் என்பது குறித்தும் விளக்கினர்.

இவர்களுடன், ‘எதனால் இந்த திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன’ என்பதை இரண்டு துறைகளின் அதிகாரிகளும் பின்னணியுடன் விளக்கினர்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியம்
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்pt web

காலை சுமார் 11 மணிக்கு தொடங்கிய குழுவின் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. பின்னர் உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆலோசனை நடைபெற்றது.

நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள்
திருட்டு, கொள்ளையில் ஈடுபட குழந்தைகளுக்கு ஒரு வருட படிப்பு.. பயிற்சியாளர்களை பெற்றோரே தேடும் அவலம்..

மசோதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்

ஆலோசனையின் இறுதியில் வக்ஃப் வாரியங்கள் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புளை அழைத்து அவர்களது கருத்துக்களை கேட்கலாம் என குழு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே, வக்ஃப் வாரியங்கள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது சிறுபான்மையினருக்கு எதிரான இன்னொரு தாக்குதல் என காங்கிரஸ் உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணியை சேர்ந்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில்தான், 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் இன்று பல மணி நேரம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் கௌரவ் கோகோய், சமாஜ்வாதி கட்சியின் முகிபுல்லா, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கல்யாண் பானர்ஜி, மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். மக்களவையின் 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையின் 10 உறுப்பினர்கள் இந்த குழுவின் அங்கமாக உள்ளனர்.

விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு ஜெகதம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு வக்ஃப் மசோதா தொடர்பான தனது பரிந்துரைகளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா மற்றும் அபராஜித் சாரங்கி உறுப்பினர்களாக உள்ளனர். மஜ்லிஸ் கட்சி சார்பாக அசாதுதீன் ஓவைசி இந்த குழுவில் இருக்கிறார்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள்
தமிழக அமைச்சரவையில் மாற்றம்? முதலமைச்சர் அளித்த பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com