நிலச்சரிவு
நிலச்சரிவுpt web

நிலச்சரிவு எங்கு, எப்போது ஏற்படும்? பின்னணியில் இவ்வளவு காரணங்கள் இருக்கா! வியப்பூட்டும் தகவல்கள்

நிலச்சரிவு எப்படி ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன? எங்கெல்லாம் நிலச்சரிவு ஏற்படும் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைதேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.
Published on

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 180க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து மாண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அதீத மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில், இன்னமும் காணாமல் போன பலரை தேடும் பணி நடக்கிறது. இந்நிலையில், நிலச்சரிவு எப்படி ஏற்படுகிறது. அதற்கான காரணம் என்ன? எங்கெல்லாம் நிலச்சரிவு ஏற்படும் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைதேடி பயணிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

பூமிக்கடியில் இருக்கும் பாறைகள், மணற்பரப்பு திடீரென நகர்வதால் ஏற்படும் விளைவே நிலச்சரிவாக இருக்கிறது. இதிலும், மலைப்பாங்கான இடங்களில் கற்கள் மற்றும் மணற்பிடிப்புகள் நகர்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நிலச்சரிவு ஏற்படுவதற்கு பல்வேறு புவியியல், உருவவியல் மற்றும் தட்பவெட்பம் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது, நீரியல் மாற்றங்கள், நிலநடுக்கம் போன்ற புறக்காரணங்களும், தவிர மனித செயல்பாடுகளும் காரணமாக இருந்துவிடுகின்றன.

பொதுவாகப் பனிமலைகள் உருகுவது, அதீத மழைப்பொழிவு, மணல் அரிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் நிலச்சரிவுக்கு வழிவகுக்கின்றன. இவற்றோடு சேர்ந்து இயற்கை சூழலில் மனித செயல்பாடுகளாலும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஒரு நிலச்சரிவு ஏற்பட, அதீத மழையோ, நிலநடுக்கம் போன்ற காரணிகள் இருந்தாலும், பல சமயங்களில் மேற்குறிப்பிட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களின் கூட்டு விளைவுகளால்கூட நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

நிலச்சரிவு
வயநாடு | 16 மணி நேரத்திற்கு முன்பே கொடுக்கப்பட்ட எச்சரிக்கை... அலட்சியத்தால் பறிபோனதா 150 உயிர்கள்?

புவியியல் காரணம் என்று பார்க்கும்போது, ஓரிடத்தில் இருக்கும் மணற்பரப்பு, பாறை போன்றவை வலுவிழப்பது, பாறைத்தட்டுகள் பலவீனப்படுவது போன்றவற்றை குறிக்கும். ஓரிடத்தில் ஆழ வேறூன்றும் மரங்கள் இல்லாத சமயத்தில், பூமிப்பரப்பு மிகவும் இளகுவாக இருக்கும்போது நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுவும், அதிக மழைப்பொழிவு போன்றவை எளிதில் நிலச்சரிவுக்கு வழிவகுக்கின்றன.

உருவவியல் என்று பார்த்தால், நிலத்தின் உருவம், அமைப்பைப் பொறுத்து இருக்கின்றன. இதிலும், வறட்சி போன்ற காரணங்களால் தாவரங்களின் பிடிப்பு அகலும்போது மலைப்பாங்கான பகுதிகளில் மண் சரிவு போன்றவை ஏற்படுகின்றன. இதில், மனிதர்களின் செயல்பாடுகளும் நிலச்சரிவுக்கு பெரும் காரணங்களாக அமைகின்றன. பூமியில் உயிர்கள் உருவாகுவதற்கு முன்பாகவே தோன்றிவிட்ட மேற்குத்தொடர்ச்சி மலை, மிகவும் வலிமையான மலையாகவே பார்க்கப்படுகிறது.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கூற்றுப்படி, வலிமையாக பாறைகளைக் கொண்டுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் நிலச்சரிவு ஏற்படுகிறது என்றால், ரெசார்ட், அணைகள், சாலைகள், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை அமைத்தது முக்கிய காரணமாகும். இது மனிதர்களே ஏற்படுத்திய பேரிடர் என்று விளக்குகிறார். சூழியல் ரீதியாக மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளில் மனித ஆக்கிரமிப்பு, இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகளை தவிர்ப்பது ஒன்றுதான் இதுபோன்ற பேரழிவுகளை தவிர்க்க நாம் எடுக்கும் முன்னெடுப்பாக இருக்கும் என்பதே சூழியல் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

நிலச்சரிவு
“அமைச்சர் உதயநிதியே காரணம்... அவரது உத்தரவில்தான் எல்லாம் நடக்கிறது” - சவுக்கு சங்கர்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com