கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா திடீர் தடை - ஜி7 நாடுகள் எதிர்ப்பு

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா திடீர் தடை - ஜி7 நாடுகள் எதிர்ப்பு
கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா திடீர் தடை - ஜி7 நாடுகள் எதிர்ப்பு
Published on

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில் அதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாட்டில் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஏற்றுமதியை நிறுத்தி வைப்பது மூலம் அத்தியாவசிய உணவு தானியங்களில் ஒன்றான கோதுமை விலையை குறைக்க முடியும் என அரசு கருதுகிறது. இந்தாண்டில் ஒரு கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அந்த திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய அரசின் முடிவுக்கு ஜி 7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜெர்மனியில் ஜி 7 நாடுகளின் விவசாய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முடிவால் உலகெங்கும் உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். எல்லா நாடுகளும் உள்நாட்டு உணவு பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்றுமதியை நிறுத்தினால் உலகளவில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிக்கும் என ஜெர்மனி விவசாய அமைச்சர் கெம் ஆஸ்டெமிர் தெரிவித்தார். உலகிற்கு கோதுமை ஏற்றுமதி செய்வதில் ரஷ்யாவும் உக்ரைனும் முன்னணியில் திகழ்ந்தன. போர் காரணமாக இவை ஏற்றுமதியை நிறுத்திவிட்டதால் பல நாடுகளில் அத்தியாவசிய உணவு தானியமான கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தை நிரப்ப இந்தியா முன் வந்த நிலையில் தற்போது உள்நாட்டு சூழலை கருத்தில் கொண்டு ஏற்றுமதியை நிறுத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இ்ந்தியா கோதுமை ஏற்றுமதியை நிறுத்தியது போல் இ்ந்தோனோஷியா பாமாயில் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள் கொண்டு வந்துள்ளது. இதே போன்ற முடிவை வேறு சில நாடுகளும் எடுத்துள்ளதால் உலகெங்கும் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அர்ஜென்டினா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் விலைவாசி உயர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன

இதையும் படிக்கலாம்: அதிகாலை முதல்.. இரண்டு கிமீ தூரம்.. எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com