மேற்கு வங்கம்: ரயில் விபத்து நடக்க இதுதான் முக்கியமான காரணம்! தற்போதைய நிலவரம் என்ன?

மேற்கு வங்கத்தில் நியூ ஜல்பைகுரி அருகே இன்று காலை 8.30 மணியளவில், இரு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித்தது, மேலும் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரயில் விபத்து
ரயில் விபத்துஎக்ஸ் வலைதளம்
Published on

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில், மோதிய விபத்தில், பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நியூ ஜல்பைகுரி அருகே இன்று காலை 8.30 மணியளவில், இரு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித்தது. மேலும், 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் சென்றதே இவ்விபத்திற்கு முக்கியகாரணமாக கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கியவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்டு சிகிச்சை அளிக்கும் பணியில், மீட்பு படையினரும் ராணுவ மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பான மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாகக் தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், காவல்துறையினர், பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் நிகழ்விடத்தில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிஎக்ஸ் தளம்

பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் இரங்கல்!

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

விபத்து எவ்வாறு ஏற்பட்டது?

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த ரயில் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதை தற்போது காணலாம்.

அசாம் மாநிலம் சில்ச்சீர் ரயில் நிலையத்திலிருந்து மேற்குவங்க மாநில தலைநகரம் கல்கத்தாவை நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு பயணிகள் ரயில் தனது பயணத்தை வழக்கமான முறையில் மேற்கொண்டு இருந்தது.

இந்த ரயில் புதிய ஜல்பாய்குரி என்ற பகுதியை அடுத்த ரங்காபாணி ரயில் நிலையத்திற்கு அருகே காலை 9 மணி அளவில் நின்று கொண்டிருந்தபோது ரயிலுக்குள் இருந்தவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் நடக்க போகும் அந்த பெரும் துயரம் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை.

ரயில் விபத்து
மேற்கு வங்க ரயில் விபத்து - 5 பேர் பலி; இன்னும் பலி எண்ணிக்கை உயரலாம்?

பயணிகள் ரயில் நின்று கொண்டிருந்த அதே தண்டவாளத்தில் பின்பக்கமாக வந்து கொண்டிருந்த சரக்கு ரயில், பயணிகள் ரயிலின் மீது பயங்கர வேகத்தில் மோதியுள்ளது. இதில், சரக்கு ரயிலை ஓட்டி வந்த லோகோ பைலட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

துயரத்திலும் ஒரு அதிர்ஷ்டமாக பயணிகள் ரயிலின் பின்பகுதியில் இரண்டு பெட்டிகள் பொருட்களை வைக்கும் லக்கேஜ் பெட்டிகளாக இருந்துள்ளது, இதனால் மிகப்பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை 15 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். விபத்திற்கான காரணம் சிக்னல் ஓவர் ஷாட் என கூறப்படுகின்றது. ரயில்வே சிக்னலை மதிக்காமல் இருப்பது தான் ரயில்வே துறை மொழியில் சிக்னல் ஓவர் ஷார்ட் என்று சொல்வார்கள்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் தானியங்கி சிக்னல் முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது மனித உள்ளீடுகள் எதுவும் இல்லாமல் ரயில்கள் செல்வதை அடிப்படையாகக் கொண்டு தானியங்கி முறையில் இந்த சிக்னல்கள் செயல்படும், அப்படி விழுந்திருந்த சிக்னலை சரியாக கவனிக்காமல் சரக்கு ரயிலின் ஓட்டுனர் அலட்சியமாக நடந்து கொண்டதுதான் விபத்திற்கான காரணமாக சொல்லப்படுகின்றது. மேற்கு மண்டல ரயில்வே துறையின் செய்தி தொடர்பாளர் கூறும் போது இந்த விபத்து முழுக்க மனித தவறால் நடந்தது என்று கூறியிருக்கிறார்.

NGMPC22 - 147

சிக்னலை கவனிக்காமல் இருந்திருந்தாலும் தூரத்தில் அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயிலில் இருப்பதை சரக்கு ரயில் ஓட்டுநர் கவனித்திருந்தால் சேதாரம் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம் ஆனால் விபத்து நிகழ்ந்த பகுதி விசிபிலிட்டி குறைவாக இருக்கும் பகுதியாக இருந்துள்ளது. மேலும் ரயிலின் வேகத்தை குறைப்பதற்கான நேரமும் சரக்கு ரயில் ஓட்டுநருக்கு இருந்திருக்கவில்லை. அதனால் தான் முழு வேகத்தில் சென்று பயணிகள் ரயில் மீது மோதியுள்ளார். காலை 5.30 மணியளவில் தானியங்கி சிக்னல் செயல்பாட்டில் குறைபாடுகள் இருந்ததாக புகார்கள் எழுந்துள்ளது . எனினும் விபத்திற்கான முழுமையான காரணங்கள் என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com