மக்களவையில் பேச லஞ்சம் பெற்றதாக புகார்: தகுதி நீக்கம் ஆகிறரா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா?

குற்றச்சாட்டுகளை விசாரணைக்குழு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மக்களவையிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா ட்விட்டர்
Published on

கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக குற்றச்சாட்டில் மஹுவா மொய்த்ரா

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டுள்ளார். அதாவது, மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இப்படி, அதானி மற்றும் பிரதமர் மோடியை அவதூறு செய்யும் வகையிலான கேள்விகளை எழுப்ப, மொய்த்ரா தன்னிடம் பல உதவிகளை கேட்டதாக கட்டுமான தொழிலதிபர் தர்ஷன் ஹிரா நந்தானி அண்மையில் புகார் கூறியிருந்தார்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ராட்விட்டர்

விளக்கம் அளிக்க மஹுவா மொய்த்ராவுக்கு மக்களவைச் செயலகம் சம்மன்

இதற்கு முன்பு, ஹிரா பல்டி அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இதனை கையில் எடுத்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, நாடாளுமன்ற மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளிக்க, அவரது பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விவகாரத்தை விசாரித்து வருகிறது. இதையடுத்து, நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு முன்பு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க மஹுவா மொய்த்ராவுக்கு மக்களவைச் செயலகம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ’31ஆம் தேதி தன்னால் விசாரணைக்கு ஆஜராக இயலாது என்றும் நவம்பர் 5-ஆம் தேதி ஆஜராக அனுமதிக்க வேண்டும்’ என நன்னடத்தை குழுவிடம் அவகாசம் கேட்டு மஹுவா மொய்த்ரா கடிதம் அனுப்பினார்.

மஹுவா மொய்த்ரா
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்: பெண் எம்.பியின் வழக்கறிஞர் திடீர் விலகல்... பின்னணி என்ன?
மஹுவா மொய்த்ரா
மக்களவையில் கேள்வி எழுப்ப பணம்.? நன்னடத்தை குழு முன்பு ஆஜரானார் மகுவா மொய்த்ரா

ஆஜராகி விளக்கம் அளித்த மஹுவா மொய்த்ரா

எனினும், நவம்பர் 2ஆம் தேதி அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, நன்னடத்தைக் குழு சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, அதே நாளில் டெல்லியில் நாடாளுமன்ற நன்னடத்தை குழுவின் முன்பு மொய்த்ரா ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது விசாரணையில் பங்கேற்ற மஹுவா பாதியிலேயே வெளியேறினார். மேலும், நெறிமுறைக் குழு தலைவர் அநாகரிகமான கேள்விகளை எழுப்புவதாக குற்றம்சாட்டினார். ஆனால், உண்மையான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மஹுவா இந்த நாடகத்தை ஆடியதாகவும், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு துணை போனதாகவும் நெறிமுறைக் குழு தலைவர் குற்றம் சாட்டியிருந்தார். முன்னதாக, மொய்த்ரா மீது புகார் கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சி எம்.பி. நிஷிகாந்த் துபே, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நன்னடத்தை குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்ததுடன் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

mahua moitra on adani
mahua moitra on adanifile image

விசாரணை அறிக்கையை வெளியிட்ட மக்களவை நெறிமுறைக் குழு

இந்த நிலையில், எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 6-4 என்ற கணக்கில் பரிந்துரை நிறைவேறியது. இதன் கூட்டத்தில், மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக 6 பேரும், எதிராக 4 பேரும் வாக்களித்ததால், 6:4 என்ற விகிதத்தில் அவர்மீதான குற்றச்சாட்டுகளை விசாரணைக்குழு ஏற்றுக்கொண்டது. இதனால், மக்களவையிலிருந்து மஹுவா மொய்த்ரா தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி லஞ்சம் எவ்வாறு பெறப்பட்டது என்பதை வெளிக்கொணர வேண்டும் என்றும் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க: ஐசிசி தரவரிசையில் ஷுப்மன் கில் முதலிடம்.. ஆனாலும் தோனியின் வேகத்தை யாரும் முறியடிக்கவில்லை!

அறிக்கை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும்!

முன்னதாக இந்த அறிக்கை குறித்து பேசிய மக்களவை நெறிமுறைக் குழுவின் தலைவர் வினோத் குமாா் சோன்கா், “தர்ஷன் ஹிரா நந்தானியின் பிரமாணப் பத்திரம், நிஷிகாந்த் துபேவின் புகார் மற்றும் மஹுவா மொய்த்ரா அளித்த வாக்குமூலம் என அனைத்து ஆதாரங்களையும் நெறிமுறைக் குழு ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்தார். இதற்கு மஹுவா மொய்த்ரா, “ரூ.13,000 கோடி மதிப்புள்ள நிலக்கரி ஊழல் தொடர்பாக அதானியிடம் முதலில் சிபிஐ விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யட்டும். பிறகு இங்கு வந்து எனது காலணிகளை அவர்கள் எண்ணலாம்” எனப் பதிலடி கொடுத்திருந்தார்.

எதிர்த்து போராடும் அளவுக்குத் திறமையானவர் மஹுவா!

மஹுவா மொய்த்ரா எதிர்கொண்டிருக்கும் இந்தப் பிரச்னையை திரிணாமுல் காங்கிரஸும் சரி, அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் சரி இதுவரை கண்டுகொள்ளவில்லை. அவரே, தனியாளாகப் போராடி வருகிறார். அதேநேரத்தில் இதுகுறித்து வாய் திறந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ”தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தானே எதிர்த்து போராடும் அளவுக்குத் திறமையானவர் மஹுவா மொய்த்ரா என்று நான் உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 48 ஆண்டுக்கால உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக.. நடப்பு சீசனில் 500 சிக்சர்கள் அடித்து சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com